திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

விசிக சாலை மறியல்: 100 பேர் கைது

DIN | Published: 18th December 2018 10:44 AM

பாஜக தேசிய செயலர் எச். ராஜாவைக் கண்டித்து, புதுச்சேரியில் திங்கள்கிழமை சாலை மறியல் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 பாஜக தேசிய செயலர் எச். ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இழிவாகப் பேசியதாகக் கூறி அக்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே போல, புதுச்சேரி திருபுவனையில் தொகுதிச் செயலாளர் விடுதலைச்செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவர்களில் 56 பேரை திருபுவனை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி அண்ணா சாலையில் நிர்வாகி ஜெயக்குமார் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வில்லியனூர் ரயில் நிலையத்தில் தொகுதி நிர்வாகி தமிழ்வளவன் தலைமையில் மாநில முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன், நிர்வாகி ஆதவன் உள்ளிட்ட பலர் திரண்டனர். இவர்கள் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வந்த பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எச். ராஜாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

More from the section

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
மின் கட்டண நிர்ணயம்: நாளை கருத்துக் கேட்பு
அரசின் இணையதளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
இளையோர் தலைமைத்துவ பயிற்சி முகாம்
நிர்வாகிகள் பதவியேற்பு