சனிக்கிழமை 19 ஜனவரி 2019

அரசுக் கொறடா மாட்டு வண்டி ஓட்டி போராட்டம்

By  புதுச்சேரி,| DIN | Published: 11th September 2018 08:57 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, புதுவை அரசுக் கொறடாவும், மணவெளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.அனந்தராமன் மாட்டு வண்டி ஓட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய காங்கிரஸார் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
 அந்த வகையில், அரசுக் கொறடா அனந்தராமன், புதுச்சேரி அருகே தவளக்குப்பம் பகுதியில் மாட்டுவண்டி ஓட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 மேலும், அரியாங்குப்பம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தலைமையில் மரப்பாலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது சிலர் திடீரென மோடியின் உருவ பொம்மையை எரித்தனர்.
 போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.சிவக்குமார், வினோத், சந்தோஷ் ஆகியோர் மீது உருவபொம்மை எரித்தது தொடர்பான வழக்குப் பதிவு செய்தனர்.
 

More from the section

தனியார் ஸ்கேன் மையத்தில் வருமான வரித் துறை சோதனை
சர்வதேச ஹிந்தி தின விழா
பிளஸ் 1, 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...
காணும் பொங்கல்: புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
அருண் ஜேட்லி விரைவில் உடல்நலம் பெறுவார்