புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 06:56 AM

வரி உயர்வுகளை திரும்பப் பெறக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களை வாட்டி வதைக்கும் வரி உயர்வுகளை திரும்பப் பெற வலியுறுத்தியும்,  தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு சார்பில் கொக்குப் பூங்கா அருகில் உள்ள அரசு அச்சகம்  எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொகுதிச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ஹேமலதா,  எழிலன்,  செல்வம், தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
மாநிலச் செயலாளர் அ.மு.சலீம்,  நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுசெல்வம் ஆகியோர் பேசினர். 
கிளைச் செயலாளர்கள் கருணாகரன்,  செந்தில்,  சத்யசீலன்,  லோகு,  மூர்த்தி,  சிவக்குமார்,  ரவிச்சந்திரன்,  வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்,  குடிநீர்க் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், எரியாத மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்,  சாலைகளை சீரமைக்க வேண்டும்,  இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

More from the section

இலங்கை மீனவர்கள் 25 பேர் மீது வழக்குப் பதிவு
சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு
திருக்காஞ்சியில் மாசி மக விழா: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
ஆயுதப் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை
நிதித் துறைச் செயலர் தகவல்