திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

புதுச்சேரி மாவட்ட  அதிமுக செயலர் காலமானார்

DIN | Published: 12th September 2018 06:57 AM

புதுச்சேரி மாவட்ட அதிமுக செயலாளர் ரவீந்திரன் (68)  செவ்வாய்க்கிழமை காலமானார்.
  இவர், ஏஎஃப்டி பஞ்சாலையில் பணியாற்றியபோது  அதிமுக தொழிற்சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.  இதன் காரணமாக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பதவியை பெற்றார்.  பின்னர், அதிமுகவில் மாநில துணைத் தலைவர்,  மாநில இணைச் செயலாளர்,  மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார்.   கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மற்றும் உழவர்கரை மாவட்டமாக அதிமுக பிரிக்கப்பட்டது.  அப்போது, புதுச்சேரி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். 
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பால் இறந்தார். இவருக்கு மனைவி சுசிலா (60),  மகன் சுரேஷ் (42),  மகள் கெளசல்யா (38)  ஆகியோர் உள்ளனர்.  
மகன் சுரேஷ் பிரான்ஸில் இருந்து வந்தவுடன் ரவீந்திரனின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும்  எனத் தெரிவித்தனர்.
 

More from the section

தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் ஆளுநர் ஆய்வு
திருக்குறள் மன்றத்தின் 7-ஆம் ஆண்டு விழா
பாவேந்தர் பாரதிதாசன் கவியரங்கம்: பிப். 5-க்குள் பெயரைப் பதிவு செய்யலாம்
புதுவை அரசின் ரூ. 150 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஜன. 22-இல் ஏலம்
மின் கம்பங்களை பயன்படுத்திக் கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு