வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

புதுவை மனித உரிமைகள் குழுக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 06:58 AM

புதுவை மாநில மனித உரிமைகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் குழுவின் மாதாந்திர கூட்டம் புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.  
மனித உரிமைக் குழுவின் தலைவர் நீதிபதி ஜெய்சந்திரன்,  உறுப்பினர் ராணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்தனர்.  இதில் வழக்குகளில் போலீஸார் கைது செய்யும் போது செய்யும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.  
இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க இந்தக்  குழு முடிவு செய்துள்ளது.

More from the section

ஐ.ஐ.டி. தேர்வில் சிறப்பிடம்
பொங்கல் பண்டிகை: புதுவை ஆளுநர், முதல்வர் வாழ்த்து
நகைகளுக்காக இரு பெண்களைக் கொன்றவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவம்
லாரி மோதியதில் தனியார் நிறுவன அதிகாரி சாவு