புதன்கிழமை 20 மார்ச் 2019

தார்சாலை அமைக்க பூமி பூஜை

DIN | Published: 22nd February 2019 09:23 AM

புதுவை மாநிலம், காலாப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட கணபதி செட்டிக்குளத்தில் ரூ. 24.32 லட்சத்தில் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
கணபதி செட்டிக்குளத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மேற்குப் பகுதியயில் அமைந்துள்ள அப்துல் கலாம் நகர் முழுவதும், நகராட்சி சாலைகள் முழுவதும் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை வருவாய்த் துறை அமைச்சரும், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஓ.எச்எப். ஷாஜகான் தொடக்கி வைத்தார்.
நிகழ்வில் உழவர்கரை நகராட்சி உதவி பொறியாளர் ராமநாதன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன், மாநில ஓபிசி அணித் தலைவர் சரவணன், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

More from the section

கூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை: டி.கே. ரங்கராஜன்
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு
புதுவை தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக்கூடாது: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு இன்று தெரியும்