புதன்கிழமை 20 மார்ச் 2019

மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா

DIN | Published: 22nd February 2019 09:23 AM

மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கந்தப்பா வீதியில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், நிர்வாகிகள் கந்தப்பா வீதியில் இருந்து பாரதி வீதி,  புஸ்ஸி வீதி வழியாக அண்ணா சிலைக்கு ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலர் ராஜன், இணை பொதுச் செயலர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன், செயலர்கள் அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, ராம.ஐயப்பன், சந்திரமோகன்,  பிராங்கிளின் பிரான்சுவா, ஆனந்த், ஜெயலட்சுமி, நற்பணி இயக்க நிர்வாகிகள் கமல்ராஜ், பசுபதி, ராஜேந்திரன், கமல்லோகு, பழனி, குமார், பிரபு, 
தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

கூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை: டி.கே. ரங்கராஜன்
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு
புதுவை தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக்கூடாது: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு இன்று தெரியும்