செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

By  விழுப்புரம்,| DIN | Published: 11th September 2018 08:55 AM

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் பணிமனை உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் இயங்கும் திண்டிவனம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 அலுவலக உதவியாளர்- ஒரு பணியிடத்துக்கு பொதுப் பிரிவினரில் முன்னுரிமை பெற்றவராகவும், அலுவலக உதவியாளர்- இரு பணியிடங்களுக்கு அருந்ததியினர் பெண்கள் பிரிவில் முன்னுரிமை பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். இவ்விரு பதவிகளுக்கும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 35 பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
 அருந்ததியினர் விதவை பெண்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
 விண்ணப்பங்கள், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திண்டிவனம்-604001 என்ற முகவரிக்கு 17.09.2018 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரவேண்டும்.
 பணிமனை உதவியாளர் பணியிடம்: இதே போல, திண்டிவனம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள 2 பணிமனை உதவியாளர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பொருத்துநர் தொழிற் பிரிவு பணிமனை உதவியாளர் பதவிக்கு பொதுப் பிரிவினரில் முன்னுரிமை பெற்றவராகவும், கம்மியர் குளிர்பதனம் தொழிற் பிரிவுக்கு அருந்ததியினர், பணிமனை உதவியாளர் பதவிக்கு (பெண்கள்) பிரிவில் முன்னுரிமை பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
 இந்த இரண்டு பதவிகளுக்கும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தொழிற் பிரிவுகளில் சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 35 பெற்றவராகவும் (01.07.2018 வரை) இருக்க வேண்டும்.
 அருந்ததியினர் விதவை பெண்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
 விண்ணப்பங்களை, முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திண்டிவனம் - 604001 என்ற முகவரிக்கு 20.09.2018 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு, நிலைய முதல்வரை நேரிடையாகவோ அல்லது தொலைபேசி எண் 04147-225557 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

More from the section

எடுத்தவாய்நத்தம் பகுதியில் ஜன.24-இல் மின்தடை
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
கார் மோதியதில் சிறுவன் சாவு
பாமக கொடியேற்று விழா
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்களுடன் அதிகாரிகளை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர்