வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கட்சிக் கொடிகள் சேதம்: இருவர் கைது

By  விழுப்புரம்,| DIN | Published: 11th September 2018 09:20 AM

திண்டிவனம் அருகே அரசியல் கட்சிகளின் கொடிகளை சேதப்படுத்திய வழக்கில் பாமக நிர்வாகி உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
 இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் அருகேயுள்ள குச்சிக்கொளத்தூர், ஒலக்கூர் கூட்டுச்சாலைகளில் இருந்த சில அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகள் கடந்த சனிக்கிழமை(செப்.8) அன்று இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து திண்டிவனம் டி.எஸ்.பி. திருமால் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், இருந்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில் இருந்தும் ஒலக்கூரைச் சேர்ந்த பாமக ஒன்றியச் செயலாளர் நாராயணசாமி மகன் மணி(எ)மணிகண்டன்(26), பிச்சையாண்டி மகன் மணிகண்டன்(28) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
 பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாறு கட்சிக்கொடிகளை சேதப்படுத்தியது சட்டப்படி குற்றமாகும். எனவே, அவர்கள் இருவரையும் ஒலக்கூர் போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
 

More from the section

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை
பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்
பயணிகள் நிழல்குடை திறப்பு
"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'