வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

காவலர் தேர்வு: 351 பேர் உடல் தகுதியில் தேர்ச்சி

By  விழுப்புரம்,| DIN | Published: 11th September 2018 09:20 AM

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காவலர் உடல் தகுதித் தேர்வில் 351 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.
 விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 534 பேர், உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
 அவர்களில், 116 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வில் பங்கேற்ற 418 பேருக்கும் உடல் உயரம் அளவிடப்பட்டது. அதில், 36 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேவையான மார்பளவு இல்லாமல் 5 பேர் வெளியேற்றப்பட்டனர்.
 இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள், ஓட்டப் போட்டியில் பங்கேற்றனர். அந்தப் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்கை அடைய முடியாமல், 26 பேர் தோல்வி அடைத்தனர். இறுதியாக, உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 351 பேர் மட்டுமே உடல் தகுதி பெற்று, தேர்ச்சி பெற்றனர்.
 செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.

More from the section

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வில்வித்தை போட்டியில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு
விழுப்புரம் மாணவிக்கு விருது, ரூ.7 லட்சம் பணமுடிப்பு
அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
பள்ளி ஆண்டு விழா