24 பிப்ரவரி 2019

நிவாரணம் கோரி கரும்பு விவசாயிகள் மனு

By  கள்ளக்குறிச்சி,| DIN | Published: 11th September 2018 09:21 AM

கள்ளக்குறிச்சி பகுதியில் கரும்பு பயிர் காய்ந்ததால் காப்பீடு நிவாரணம்கோரி, கோட்டாட்சியரிடம் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை வழங்கினர்.
 கள்ளக்குறிச்சி கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உள்பட்ட கச்சிராயப்பாளையம், வடக்கனந்தல், கரடிசித்தூர், கள்ளக்குறிச்சி தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, மூரார்பாளையம், தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் நிகழ் ஆண்டு சுமார் 16 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இப்பயிருக்கு சுமார் 8300- க்கும் மேற்பட்ட விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் வங்கிகளின் மூலம் கடன் தொகையாக பெற்றுள்ளனர். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு கட்டணமாக ரூ.1,472யை செலுத்தி உள்ளனர் அதற்கு ரசீது ஏதும் வழங்கவில்லையாம்.
 இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் வட்டத்தைச் சேர்ந்த பகுதிகளில் மழை இல்லாததால் கடும் வறட்சியினால் கரும்பு பயிர்கள் காய்ந்து விட்டன.
 ஒரு ஏக்கர் கரும்பினை பயிர் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1லட்சம் வரை செலவானதாம்.
 காப்பீட்டு செய்த விவசாயிகள், காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.1லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் ம.தினேஷிடம் மனுவாக வழங்கினர்.
 மேலும், விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கோரிக்கை வைத்தார். உடன் மாநில செயலாளர் சின்னப்பா உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.
 

More from the section

விழுப்புரம் எம்.பி. மறைவுக்கு பிரதமர், ஆளுநர் இரங்கல்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கொலை: பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் திறப்பு
தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காய்கனி பதனிடுதல் பயிற்சி