வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

காவலர் உடல் தகுதித் தேர்வு: பெண்கள் 419 பேர் தேர்ச்சி

DIN | Published: 12th September 2018 09:33 AM

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண் காவலர் உடல் தகுதித் தேர்வில் 419 பேர் தேர்ச்சி பெற்றனர்.
விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்போர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிந்தவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. 
ஆண்களுக்கான உடல் தகுதித் தேர்வு  நிறைவடைந்த நிலையில், பெண்களுக்கான உடல் தகுதித் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 810 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 529 பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களுக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டதில் 107 பேர் வெளியேற்றப்பட்டனர். 
பின்னர் நடைபெற்ற 400மீ ஓட்டப் போட்டியில்  3 தகுதியிழந்தனர். அனைத்திலும் தகுதி பெற்று 419 பேர் தேர்ச்சி பெற்றனர்.
 

More from the section


உளுந்தூர்பேட்டையில் தவாக கொடியேற்று விழா


சிறுமியிடம் தகராறில் ஈடுபட்ட  கும்பலை பிடிக்கச் சென்ற காவலர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

காணும் பொங்கல் கொண்டாட்டம்: காவல் துறை எச்சரிக்கை
காவல் நிலையங்களில் பொங்கல் விழா
மாட்டுப் பொங்கல்: கிராமங்களில் கோலாகலம்