வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

சாமுண்டீஸ்வரி கோயிலில் வீர கும்ப வழிபாடு

DIN | Published: 12th September 2018 09:34 AM

அவலூர்பேட்டையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வீர கும்ப வழிபாடு அண்மையில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை தினத்தில் தேவாங்கர் குல இளைஞர்கள் சார்பில் இந்த வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவில், பெரிய குளத்தில் இருந்து 3 கலசங்களில் புனித நீர் எடுத்து அலகுகள் வைத்து தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் மூன்று கலசங்களையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை  இரவு 7 மணியளவில் கலச நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஸ்ரீவீரபத்திர சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சமைத்த சாதத்தை கும்பமாக கொட்டி அதன் மேல் முருங்கைக்கீரை, பலவித காய்கறிகளை கொண்டு செய்த குழம்பை ஊற்றி, அரிசி மாவால் செய்து வேக வைத்த விளக்குகளில் எண்ணெய் ஊற்றி தீபங்கள் ஏற்றப்பட்டன. 
பூஜைக்கு பின் பக்தர் ஒருவரிடம் கும்ப சாதத்தை மூன்று உருண்டைகளாக உருட்டி அளித்தனர். பின்னர், 
பெரிய குளத்துக்கு நள்ளிரவு 12 மணியளவில் சாத உருண்டைகளை கொண்டு சென்றனர். அங்கு ஆகாசவாணிக்கு ஒரு உருண்டை,  பூமாதேவிக்கு ஒரு உருண்டை, பூதபேதாளத்துக்கு ஒரு உருண்டை வீதம் வழங்கிவிட்டு மீண்டும் ஆலயத்தை அடைந்தனர். பின்னர், வீரபத்திரசுவாமிக்கு விபூதி அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. படையலிடப்பட்ட கும்ப சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

More from the section

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை
பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்
பயணிகள் நிழல்குடை திறப்பு
"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'