சனிக்கிழமை 19 ஜனவரி 2019

சாலாமேட்டில் மதுக் கடையை மூடக் கோரிக்கை

DIN | Published: 12th September 2018 09:31 AM

விழுப்புரம் அருகேயுள்ள சாலாமேட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரகம், எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள சாலாமேடு துரையரசன் நகரில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் மதுக் கடைகள் பொதுமக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் புதிதாக ஒரு டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், அடுத்த நாளான சனிக்கிழமை கடை திறக்கப்படாமல் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த டாஸ்மாக் மதுக் கடையை திறக்கக் கோரியும், மூடக் கோரியும் இரு தப்பிலும் போராட்டம் நடைபெற்றது. இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். திங்கள்கிழமை வரை அந்த டாஸ்மாக் மதுக் கடை மூட்டப்படிருந்தாதல், விற்பனை நடைபெறவில்லை.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டு வழக்கம்போல விற்பனை நடைபெற்றது. இதனைக் கண்டித்து, துரையரசன் நகரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, மதுக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியரகத்துக்கு சென்ற அவர்கள், கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், இது தொடர்பாக விசாரித்து 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.

More from the section

விக்கிரவாண்டி அருகே  தீ விபத்து: இளைஞர் சாவு
ஏமப்பேரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
கடலில் மூழ்கி கேபிள் ஆபரேட்டர் சாவு
திண்டிவனம் அருகே பேருந்து மீது வேன் மோதல்: ராஜஸ்தான் பயணி சாவு