புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய செஞ்சி வட்டக் கிளை தேர்தல்

DIN | Published: 12th September 2018 09:30 AM

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் செஞ்சி வட்டக் கிளை தேர்தல் வட்டார வளமைய பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
 மாவட்ட தலைவர் சு.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் பி.முருகேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். 
தேர்தல் அலுவலர்களாக கௌ.முகமதுகாஜா மாவட்ட துணைத் தலைவர் கே.சி.சடகோபன் ஆகியோர் செயல்பட்டனர். 
 இதில் சங்கத் தலைவராக எ.பூவழகன், செயலராக பி.படவட்டான், பொருளாளராக வா.விஜேந்திரன், துணைத் தலைவர்களாக வே.இளவரசு, பி.கணபதி, பி.வெங்கடேசபெருமாள், பி.ஜெயந்தி, இணைச் செயலர்களாக க.தாமோதரன், இ.விஜயரங்கன், எஸ்.ரவி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர் கு.முருகன் நன்றி கூறினார்.

More from the section

சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
இறைச்சி கடைக்கு இடம் வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் அருகே இளைஞர், பெண் தற்கொலை
அனைத்து மக்கள் விடுதலை கட்சி தர்னா
மூதாட்டி கொலை: இளைஞர் கைது