செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

தீ  விபத்து தடுப்பு பயிற்சி

DIN | Published: 12th September 2018 09:35 AM

மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில்  மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி  அண்மையில் அளிக்கப்பட்டது. 
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அ.சதீஷ்  வரவேற்றார். கல்லூரி தாளாளரும், பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சுவாமிகள் தலைமை வகித்தார். செயலர் ராஜீவ் குமார் ராஜேந்திரர், துணை முதல்வர் ச.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் தீபா தீ பாதுகாப்பு பொருள்கள் நிறுவனத் தலைவர் எஸ்.ஜெயசீலன் தலைமையிலான  குழுவினர் தீ விபத்தை தடுக்கும் வழி முறைகள் பற்றி மாணவ மாணவி களுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் த.கோபிநாத் நன்றி கூறினார்.
 

More from the section

வாடகை காரை ஒப்படைக்காமல் ஏமாற்றியவர் கைது
மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு மௌன அஞ்சலி
விழுப்புரம் அருகே: காவல் துறை வாகனம் மோதியதில் 3 பேர் சாவு
காரில் மது கடத்திய இளைஞர் கைது