வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

மக்கள் தொடர்பு முகாம்

DIN | Published: 12th September 2018 09:33 AM

உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  முகாமில் வருவாய் வட்டாட்சியர் ஜி.இளங்கோவன், சமூக நல வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் வெங்கடாஜலபதி வரவேற்றார். முகாமில் 18 பயனாளிகளுக்கு வீட்டுமனை, 23 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 26 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு,  20 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை என மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் க.ராஜேந்திரன் வழங்கினார்.   முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன், மண்டல துணை வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், மணிமேகலை, அலுவலக உதவியாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வாடகை மையம் அமைக்க கரும்பு அறுவடை இயந்திரம் அளிப்பு
பொங்கல் ஊக்கத்தொகையும் புறக்கணிப்பு: பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி
தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
தேசிய இளையோர் வார விழா