சனிக்கிழமை 23 மார்ச் 2019

அனைத்து மக்கள் விடுதலை கட்சி தர்னா

DIN | Published: 19th February 2019 09:22 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் அனைத்து மக்கள் விடுதலை கட்சி சார்பில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது. 
போராட்டத்துக்கு கட்சியின் மாநில செயல் தலைவர் டி.கொளஞ்சி தலைமை வகித்தார். அனைத்து தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஜி.ஆர்.ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெய்சங்கர், மாநில அமைப்பாளர் ஆர்.ராஜகீர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி ஜி.சசிகலா வரவேற்றார். 
அனைத்து மக்கள் 
விடுதலைக் கட்சித் தலைவர் பி.சி.பூபதி கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் அ.தேவராஜ், மாநில செயலர்கள் எஸ்.ஆர்.அம்பேத்கர், ந.கி.ராமலிங்கம், ஜி.கே.முருகன் உள்ளிட்டோர் பேசினர். 
தர்னாவில், தமிழகத்தில் உள்ள 15,622 ஊர்க்காவல்படை வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கடலூர் மாவட்ட தலைவர் எம்.சுப்புடு, கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் அ.சபாநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில மகளிர் அணி அ.இந்திராணி நன்றி கூறினார்.

More from the section

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.33 லட்சம் பறிமுதல்: ரூ.4 லட்சம் பாத்திரங்களும் பறிமுதல்
ரூ.500 குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற தொழிலாளி!
பேருந்தில் பணம் திருட்டு: 3 பெண்கள் கைது
முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கு: ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வுக்கு 9 ஆண்டு சிறை