புதன்கிழமை 20 மார்ச் 2019

விழுப்புரம் அருகே இளைஞர், பெண் தற்கொலை

DIN | Published: 19th February 2019 09:22 AM

விழுப்புரம் அருகே சேர்ந்து வாழ முடியாததால் இளைஞரும் பெண்ணும்  விஷம் அருந்தி, ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அனந்தபுரத்தை அடுத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மலர் (35). இவருக்கும், கண்ணனுக்கும் திருமணமாகி, பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 
இந்த நிலையில், விழுப்புரம் அருகே வளவனூரைச் சேர்ந்த ஆனந்தன் (20) என்ற இளைஞருக்கும், மலருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக, வளவனூரில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனராம்.
ஆனால், மலருடன் சேர்ந்து வாழ்வதற்கு ஆனந்தனின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனராம். இதனால், ஆனந்தனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய மலர், ஞாயிற்றுக்கிழமை மாலை விஷம் அருந்திவிட்டாராம். இதில், அவர் உயிரிழந்தார். 
இதையடுத்து, அங்கு வந்த வளவனூர் போலீஸார் மலரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே,  மனமுடைந்த ஆனந்தனும் விஷம் அருந்தி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

More from the section

ஆக்கப்பூர்வ தேர்தலாக மாற்ற வேண்டும்: விசிக வேட்பாளர் ரவிக்குமார்
கல்லைத் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்.2-இல் தொடக்கம்
செஞ்சியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
உழைக்கும் தொண்டர்கள் அதிகமுள்ள கட்சி திமுக: க.பொன்முடி