சனிக்கிழமை 23 மார்ச் 2019

தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை

DIN | Published: 22nd February 2019 09:35 AM

விழுப்புரம் மாவட்டத்தில் தேமுதிக அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணியாற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக,  தேமுதிக மாணவரணி,  கேப்டன் மன்றம்,  தொண்டரணி,  விவசாய அணி,  வர்த்தகரணி மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் தனியார் அரங்கில் நடைபெற்றது.  
விழுப்புரம் நகரச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.  மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமை வகித்துப் பேசினார்.
தொடர்ந்து,  5 அணிகளின் மாநில நிர்வாகிகள் அன்புராஜன்,  ஜி.விஜயகுமார், எஸ்.சந்திரன், ராஜசந்திரசேகரன்,  சுல்தான்பாஷா, வீரபத்திரன், திருநாவுக்கரசு,  சண்முகசுந்தரம்,  கிருஸ்துராஜ், கவாஸ்கர்,  ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்று,  ஆலோசனைகள் வழங்கிப் பேசினர்.  
எதிர் வரும் மக்களவைத் தேர்தலில், கட்சி நிர்வாகிகளுடன் தொண்டரணி, விவசாய அணி,  மாணவரணி,  வர்த்தகரணி,  கேப்டன் மன்ற அணி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.  
கூட்டணிக் கட்சியினருடன் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பது,  வாக்குச்சாவடி நிலையிலான பிரசாரங்களை மேற்கொள்வது,  கட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசுவது 
குறித்தும் ஆலோசனைகள் வழங்கினர்.

More from the section

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.33 லட்சம் பறிமுதல்: ரூ.4 லட்சம் பாத்திரங்களும் பறிமுதல்
ரூ.500 குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற தொழிலாளி!
பேருந்தில் பணம் திருட்டு: 3 பெண்கள் கைது
முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கு: ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வுக்கு 9 ஆண்டு சிறை