சனிக்கிழமை 23 மார்ச் 2019

பயணிகள் நிழல்குடை திறப்பு

DIN | Published: 22nd February 2019 09:34 AM

மயிலம் தொகுதி பேரணி ஊராட்சியில் புதிதாக பேருந்து  பயணிகள் நிழல்குடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரணியில்  மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த பயணிகள் நிழல் குடையை அத்தொகுதி எம்எல்ஏ இரா.மாசிலாமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மந்தம் முன்னிலை வகித்தார். திமுக மாநில விவசாய அணி சார்பில் ரகுபதி வரவேற்றார்.

மாவட்ட துணைச் செயலர்கள் வசந்தா, மலர்மன்னன், பொருளாளர் ரவி, மயிலம் ஒன்றியச் செயலர்கள் சேதுநாதன், மணிமாறன், மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், நிர்வாகிகள் கொடியம் குமார், செல்வகுமார், பாலசுந்தரம், சாரங்கபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.33 லட்சம் பறிமுதல்: ரூ.4 லட்சம் பாத்திரங்களும் பறிமுதல்
ரூ.500 குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற தொழிலாளி!
பேருந்தில் பணம் திருட்டு: 3 பெண்கள் கைது
முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கு: ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வுக்கு 9 ஆண்டு சிறை