சனிக்கிழமை 23 மார்ச் 2019

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்

DIN | Published: 22nd February 2019 09:35 AM

விழுப்புரம் அருகே மணல் திருட்டு தொடர்பாக 9 மாட்டுவண்டிகளை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், சதீஷ், சுபிக்ஷô ஆகியோர் வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனர். 
அப்போது, தென்பெண்ணை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததாக 9 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சாலாமேட்டைச் சேர்ந்த ஹிரிகிருஷ்ணன்(45), ரங்நாதன்(52), மணிகண்டன்(45), காத்தமுத்து(550, சங்கர்(46), ராமலிங்கம்(50), கண்டமானடியைச் சேர்ந்த சுந்தரரமூர்த்தி(51), அரியலூர் திருக்கையைச் சேர்ந்த ரமேஷ்(40) ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.33 லட்சம் பறிமுதல்: ரூ.4 லட்சம் பாத்திரங்களும் பறிமுதல்
ரூ.500 குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற தொழிலாளி!
பேருந்தில் பணம் திருட்டு: 3 பெண்கள் கைது
முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கு: ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வுக்கு 9 ஆண்டு சிறை