திங்கள்கிழமை 25 மார்ச் 2019

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கொலை: பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை

DIN | Published: 23rd February 2019 08:57 AM

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை ஆட்டோவில் கடத்திக் கொலை செய்த வழக்கில், பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
 விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் வசித்து வந்தவர் ஜோசப் ரத்தினகுமார் (62). ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். இவருக்கும் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த பெஞ்சமினுக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
 இந்த நிலையில் கடந்த 7.5.2017-இல் வீட்டில் தனியாக இருந்த ஜோசப் ரத்தினகுமாரை 3 பேர் ஆட்டோவில் கடத்தி கட்டையால் தாக்கி பத்திரம் ஒன்றில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டில் விட்டுச் சென்றனராம். பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
 இதுதொடர்பாக பெஞ்சமின், அவரது மகன்கள் இளையராஜா(39),அறிவழகன் (34), குமார், ராமர் மகன் செந்தில் (34) , செல்வராஜ் மகன் நித்தியராஜ் (27), அறிவழகன் மனைவி சரஸ்வதி(32), அன்பழகன் மகன் ஆனந்த்(33) ஆகிய 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வழக்குரைஞர் நிர்மல்சுபச்சந்திரன் வாதாடினார். வழக்கு விசாரணையின்போதே பெஞ்சமின், அவரது மகன் குமார் ஆகிய இருவரும் உயிரிழந்து விட்டனர்.
 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.செல்வமுத்துக்குமாரி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட அறிவழகன், இளையராஜா, செந்தில், நித்தியராஜ், சரஸ்வதி, ஆனந்த் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
 
 
 
 

More from the section

அதிமுகவின் மக்கள் பணி: ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆட்டோ பேரணி
ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு ரத்தாகும்: உதயநிதி ஸ்டாலின்
அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்ட பெண் சாவு
நெடுமானூரில் பாரதியார் தமிழ்ச் சங்கம் தொடக்கம்