24 மார்ச் 2019

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் திறப்பு

DIN | Published: 23rd February 2019 08:49 AM

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
 கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து பிரிவுக்கென தனியாக காவல் நிலைய கட்டடம் ரூ.58.56 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
 இதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.இராமநாதன் புதிய கட்டடத்தில் த்துவிளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
 கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் எம்.பாபு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ப.தங்கபாண்டியன், கூட்டுறவு விவசாய வங்கி தலைவர் அ.ரங்கன், வழக்குரைஞர் இ.வெற்றிவேல், முன்னாள் அரிமா சங்கத் தலைவர் ம.மருதை, காவல் ஆய்வாளர் தங்க.விஜய்குமார், காவல் உதவி ஆய்வாளர் வீ.வினோத்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எஸ்.மகாலிங்கம்,உதவி பொறியாளர் இரா.பூங்குழலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

அதிமுகவின் மக்கள் பணி: ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆட்டோ பேரணி
ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு ரத்தாகும்: உதயநிதி ஸ்டாலின்
அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்ட பெண் சாவு
நெடுமானூரில் பாரதியார் தமிழ்ச் சங்கம் தொடக்கம்