சனிக்கிழமை 23 மார்ச் 2019

காய்கனி பதனிடுதல் பயிற்சி

DIN | Published: 23rd February 2019 08:49 AM

திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் காய்கள், பழங்கள் பதனிடுதல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
 முகாமுக்கு, கல்லூரிச் செயலர் ஈ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.முஸ்தாக்
 அகமது, முதல்வர் டி.எஸ்.வீரமணி, நிர்வாக அலுவலர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதியியல் துறைத் தலைவர் ஜி.மணிகண்டன் வரவேற்றார்.
 முகாமில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ்.கண்ணன், கடலூர் மண்டல வேளாண் உதவி இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று காய்கள், பழங்களை எவ்வாது பதனிடுவது, மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
 ஏற்பாடுகளை இயற்பியல் துறைத் தலைவர் ஜெ.சந்திரசேகர் செய்திருந்தார். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.புருஷோத்தமன் நன்றி கூறினார்.

More from the section

மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: என்எல்சி அதிகாரி
நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
கஞ்சா பதுக்கல்: வெளிநாட்டு மாணவர்கள் இருவர் கைது
வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் திருட்டு
கடலூர்-விழுப்புரம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு: பாதுகாப்பு ஆணையர் ஆய்வு