சனிக்கிழமை 23 மார்ச் 2019

தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 23rd February 2019 08:49 AM

பன்னாட்டு தாய் மொழிகள் தினத்தை முன்னிட்டு கல்லை தமிழ் அமைப்புகள் சார்பில் கள்ளக்குறிச்சி - கச்சேரி சாலையில் அம்பேத்கார் சிலை அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 பன்னாட்டு தாய் மொழிகள் தினம் பிப்.21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கல்லை தமிழ் வழிக் கல்வி இயக்கத்தினர் தாய் மொழித் தமிழின் சிறப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு கல்லை மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர் சிலம்பூர்க்கிழான் தலைமை வகித்தார். சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், சங்கை தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க செம்பியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்டப் பொதுச் செயலர் செ.வ.மதிவாணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கல்லை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வீ.கோவிந்தராமன், திருக்குறள் முன்னணிக் கழகச் செயலர் பிரகாசு, விருகாவூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகம் பிச்சப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆர்ப்பாட்டத்தில், உயர் கல்வியை தமிழ்வழியில் தற்சார்பு அறிவியல் கல்வியாக அரசே வழங்க வேண்டும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை
 வழங்க வேண்டும். வணிகக் கடை நிறுவனப் பெயர் பலகைகள் தனித் தமிழில் எழுதப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், பல்வேறு தமிழ்ச் சங்கத்தினரும் பங்கேற்றனர்.
 
 

More from the section

மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: என்எல்சி அதிகாரி
நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
கஞ்சா பதுக்கல்: வெளிநாட்டு மாணவர்கள் இருவர் கைது
வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் திருட்டு
கடலூர்-விழுப்புரம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு: பாதுகாப்பு ஆணையர் ஆய்வு