வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கு: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

DIN | Published: 23rd February 2019 08:49 AM

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கு கட்டட பணிக்கு மாநில அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
 1970-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தமிழ்நாட்டில் உள்ள விற்பனைக் கூடங்களில் முதன்மையாக விளங்கி வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் சராசரியாக1.25 லட்சம் விவசாயிகள் ரூ.200 கோடி மதிப்பிலான விளைபொருள்களை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். தீவிர அறுவடை காலங்களில் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இடப் பற்றாக்குறை, நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
 இதனைக் கருத்தில் கொண்டு நிகழாண்டில் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 7,500 மெ.டன் கொள்ளவு கொண்ட பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கை ரூ.15 கோடியில் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் நடைபெற்றது.
 இதையொட்டி நடைபெற்ற பூமி பூஜையில் மாநிலஅமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், ஆரணி மக்களவை தொகுதி உறுப்பினர் வெ.ஏழுமலை, எம்எல்ஏ செஞ்சிமஸ்தான், செஞ்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் வி.ரங்கநாதன், மாவட்ட வேளாண்மை விற்பனைக் கூட உதவி இயக்குநர் தனசேகர், விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் குழு செயலர் ஆறுமுகராஜன், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் ஞானமூர்த்தி நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் குமரேசன், செயலர் கே.பி.சி.குமார்,பொருளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

பள்ளியில் சிட்டுக் குருவிகள் தினம்
செவிலிய மாணவர்களுக்கு காச நோய் விழிப்புணர்வு
அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் தேரோட்டம்
மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்