சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

DIN | Published: 15th January 2019 09:46 AM

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் கடந்த 1999-ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பி.எஸ்சி. கணிதம் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள தனியார் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில், கடந்த 1999-ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து தற்போது பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 45 முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள், தங்களது கல்லூரி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
 இந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் சுப்புரமன், குமரன், அண்ணாமலை, பல்கலைக்கழகப் பேராசிரியர்
 அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 நிகழச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கணேஷ், சஞ்சீவிராமன், சாதிக், சுசித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
 
 
 
 

More from the section

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கொலை: பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் திறப்பு
தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காய்கனி பதனிடுதல் பயிற்சி
பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கு: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்