செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

தேசிய இளையோர் வார விழா

DIN | Published: 15th January 2019 09:45 AM

மேல்புதுப்பட்டு விவேகானந்தர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில், தேசிய இளையோர் வார விழா அண்மையில் மேல்புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 சங்கச் செயலர் சே.காத்தவராயன் வரவேற்றார். திண்டிவனம் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் அ.தண்டபாணி தலைமை வகித்தார். மேல்மலையனூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ச.சங்கர், மானந்தல் ஆசிரியர் அ.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கிராம நிர்வாக அலுவலர் ஆ.காளிதாஸ், அங்கன்வாடி மைய ஆசிரியர் ஏ.கலாவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
 இந்நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரை, ஓவியம், மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விழாவில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினர் சி.சூர்யா நன்றி கூறினார்.
 
 

More from the section

சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
இறைச்சி கடைக்கு இடம் வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் அருகே இளைஞர், பெண் தற்கொலை
அனைத்து மக்கள் விடுதலை கட்சி தர்னா
மூதாட்டி கொலை: இளைஞர் கைது