செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

சிறுமியிடம் தகராறில் ஈடுபட்ட  கும்பலை பிடிக்கச் சென்ற காவலர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

DIN | Published: 17th January 2019 09:33 AM

திருக்கோவிலூரில் சிறுமியிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கும்பலை பிடிக்கச் சென்ற காவலர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக, 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருக்கோவிலூரில் உள்ள என்ஜிஜிஓ நகரில் 37 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகளும் வசித்து வருகின்றனர். 
அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (25). செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், பிரபு தனது நண்பர்களான திருக்கோவிலூரைச் சேர்ந்த முரளி, அருண்குமார், அஜித்குமார், சந்தப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோருடன் அந்தப் பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அன்றிரவு 11.30 மணியளவில் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பெண்ணிடமும், பள்ளி சிறுமியிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் வந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர்கள் பிரேம்குமார், பிரேம்நாத், குணசேகரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்தனர்.
அப்போது, திடீரென பிரபு
இரும்புக் கம்பியால் காவலர் குணசேகரன் தலையில் தாக்கினார். இதில், அவர் மயங்கி கீழே விழுந்தார். 
 இதனால், பலத்த காயமடைந்த காவலர் குணசேகரன், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் 
ஏ.மகேஷ், ஆய்வாளர் ரத்தினசபாபதி, உதவி ஆய்வாளர் பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 
இந்த நிலையில், பள்ளி சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டதாக, என்ஜிஜிஓ நகரில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் அஜித்குமார்(27), அருண்குமார் (22), சந்தப்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார் (25) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான பிரபு, முரளி ஆகியோரை போலீஸார் தேடி 
வருகின்றனர்.
 

More from the section

சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
இறைச்சி கடைக்கு இடம் வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் அருகே இளைஞர், பெண் தற்கொலை
அனைத்து மக்கள் விடுதலை கட்சி தர்னா
மூதாட்டி கொலை: இளைஞர் கைது