வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கார் மோதியதில் சிறுவன் சாவு

DIN | Published: 22nd January 2019 09:30 AM

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் வசிப்பவர் செங்கோடன் மகன் பாண்டியராஜன் (34). 
இவரது நண்பர் கள்ளக்குறிச்சியை அடுத்த மிளகாய்த்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (26), அவரது மகன் ஹரிபிரசாந்த்(4). இவர்கள் மூவரும் மோட்ஹடார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். 
அம்மன் நகர் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஹரிபிரசாந்த் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.  விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


 

More from the section

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை
பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்
பயணிகள் நிழல்குடை திறப்பு
"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'