வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கல்லைத் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

DIN | Published: 19th March 2019 08:40 AM

கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி சேலம் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.வ.புகழேந்தி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் செ.வ.மகேந்திரன் வரவேற்றார்.
 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சா.சண்முகம் தகையணங்குறுத்தல் என்ற திருக்குறள் அதிகாரத்துக்கு பொருள் விளக்கம் கூறினார். நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.இலட்சுமிபதி பெண்ணிற் பெருந்தக்க யாவுள எனும் தலைப்பில் பேசினார்.
 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை தேவநேய சித்திரச் செல்வி, வடசெட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.லட்சுமி உள்ளிட்டோருக்கு சாதனைப் பெண்மணி விருதுகளை அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் சி.கோவிந்தசாமி வழங்கினார்.
 தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதிவாணனுக்கு சங்க துணைச் செயலாளர் இல.அம்பேத்கார் உள்ளிட்ட தமிழ்ப் புலவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
 கல்லை கவிஞர் ஜி.கோவிந்தராசன் தலைமையில் உலக மகளிரைப் போற்றுவோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
 பெ.செயராமன் கவிதை பாடினார். துணைச் செயலாளர் செ.வ.மகேந்திரன் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியான், கே.வி.ஆர்.ஜெயபால் உள்ளிட்ட பலர் பேசினர். துணைச் செயலாளர் இராம.முத்துசாமி நன்றி கூறினார்.
 

More from the section

பதற்றமான வாக்குச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு
4,038 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு
சைக்கிள் மீது லாரி மோதல்: முதியவர் சாவு
தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இன்று விடுமுறை