செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

மத அரசியல்-13: டாவோயிஸம்

By C.P.சரவணன்| DIN | Published: 10th September 2018 11:00 AM

 

டாவோயிஸம் (Taoism)

ஆரம்ப காலத்தில் டாவோ ஒரு மதமாக இருந்தது என சொல்வதை விட ஒரு தத்துவமாக இருந்தது எனச் சொல்லலாம். சீனாவின் பழமையான மதம் டாவோயிஸம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு மிகப் பழமையான மதம் இது.

 

லாவோட் ஸே

லாவோட் ஸே (Laozi) என்றால் ”வயதான எஜமான்” அல்லது வயதானவர் எனப் பொருள்படும். லாவோட்ஸே தன் வாழ்வின் பெரு பகுதியை சௌ பேரரசிலேயே கழித்தார். பேரரசின் வீழ்ச்சியை முன் கூட்டியே அவர் உணர்ந்து அங்கிருந்து விலகி எல்லைப் ப்குதிய்ல் வசித்தார். அங்கிருந்த சுக்கச் சாவடி அதிகாரியான “இன் ஷி’வேண்டுகோளின்படி கி.மு. 4 அல்லது 3-ஆம் நூற்றாண்டு டாவோ டே ஜிங் (Tao Te Ching) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இது ஒரு மனிதன் உயர்வை அடைவதற்கும், நல்ல தலைவானாக விளங்குதற்கும் என்ன மாதிரியான வழி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான தத்துவ நூலாகும்.

சொர்க்கத்திற்கும், பூமிக்கும் முன்பாக என்ன இருந்தது அல்லது இருக்கிறது என்பதைப் பற்றிய ஒர் திறன்பெற்ற ஆய்வையும் அதில் விளக்கி இருந்தார். இவரது நூல் சமயம் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் இருந்தது அது பலரையும் ஈர்த்தது.  எனினும் டாவோயிஸம் அப்போது நெறி முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கற்ற ரீதியிலேயே பின்பற்றப்பட்டு வந்தது.

 

ஸாங் டாவோலிங்

ஸாங் டாவோலிங் (Zhang Daoling ) என்பவர் கி.பி.142ஆம் ஆண்டில் டாவோ டே ஜிங்  நூலைப் புனித நூலாக விளக்கினார்.  இது வெறும் தத்துவம் சார்ந்த நூல் மட்டுமல்ல, வானத்து தேவதைகளை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அறிவுறுத்தும் புனித நூல் என்பதைக் கண்டறிந்தார்.

ஆன்மீகத் தொடர்பினை அழகாகவும், ஆழமாகவும் இதில் விளக்கப்பட்டிருப்பதை நன்றாகப் புரிந்துணர்ந்தார். மேலும் மரணமற்ற நிலையைப் பற்றியும் மனிதர்கள் அறிந்து கொள்ள இது உதவுவதாகவும் கூறி, ஒரு ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட தீதியில் டோவோயிஸம் என்னும் மதத்தை உருவாக்கினார்.

கியா-ஃபூ ஃபெங் மற்றும் ஜேன் இக்லிஷ் இருவரும் டாவோ டே ஜிங்  நூலை நவீன மொழிபெயர்ப்பாக்கினர். இதன்பிறகே டாவோயிஸம் சார்ந்த நூல்கள் ஏராளமாக வெளிவந்து மக்கள் மத்தில் பரவலான எழுச்சியை ஏற்படுத்தியது. நிறைய பேர் இம்மத்தில் ஈடுபாடு வைத்து அவனைப் பின்பற்றத் தொடங்கினர். இதன் பின்னர் டாவோயிஸம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் தன் சிறகை விரித்தது என்பது வரலாற்றுச் சுவடுகள் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

 

எட்டு சாவாமையுள்ளவர்கள்

சாங் லிங் அதாவது சாங் தாவோ லிக் என்பவர் மேற்குச் சீனாவில் ஓர் இரகசிய ஸ்தாபனத்தை நிறுவி மந்திர சக்தியால் சுகப்படுத்தும் இரசவாத முறைய அறிமுகப்படுத்தினார். புத்த மதத்தின் தோற்றத்தினால் வந்த சவாலை சமாளிக்க தன்னை ஒரு மதமாக பிரபலப்படுத்திக் கொண்டது. அதன்பின் சாவாமையுள்ளவர்கள் எட்டு(Eight Immortals) தெய்வங்களை (பா ஷியான்) அடுப்படியின் தெய்வம் (சாஓ ஷென்) நகர தெய்வக:ள் (ஹெங் ஹூயங்), வாயில் காவலர்கள் (மென் ஷென்) போன்றோர் அடங்குவர் வணங்கப்பட்டனர்.

ஒரு கூட்டத்தில் டாவோயிஸம் என்பது தத்துவம் மட்டுமே என்றும், சமயம் மட்டுமே என்றும் இருவேறு கோணத்தில் கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்து அறிவியலாளர்களும் தீவிரமான ஆய்வினை மேற்கொண்டனர். எனினும் முடிவில் இது இயற்கை, மனிதம் மற்றும் தெய்வீகம் ஆகிய அனைத்தையும் வலியுறுத்தி இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மட்டுமன்றி, ஒரு தலைவனாக இருந்து கொண்டு மக்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்னும் அரிய வழிகாட்டுதலையும் இது நமக்கு அருளியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மூட நம்பிக்கைகளால், கி.பி.19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சீனாவில் டாவோயிஸம் திட்டமிட்டு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இந்த மதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது மீண்டும் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி உள்ளது.  அதன் அரிய தத்துவங்கள் அதன் வளத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

இப்போது கீழை தேசம் மட்டுமல்லாமல் மேலை தேசத்தவர்களும் டாவோயிஸத்தின் மீது புதிய அக்கறை கொண்டு வருகின்றனர். முக்கியமாமக அவர்கள் இதனை மதம் சார்ந்த விஷயமாகவோ அல்லது தனி மனித ஒழுக்கத்தினை வற்புறுத்தும் தத்துவம் சார்ந்த விஷயமாகவோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் தரும் உண்மை.

அக்யூபங்சர், மூலிகை, மருத்துவம் போன்ற மருத்துவம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமே இதனை அணுகி வருகிறார்கள்.  டாவோயிஸம் எனபதில் இம்மாதியான மருத்துவம் ஒரு பகுதி என்பதே உண்மை.

டா என்றால் வழி அல்லது ‘பாதை’ என்று பொருள். இந்த அண்டமானது இயல்பாகவே ஒரு வழியைக் கொண்டிருக்கிறது.  அந்த வழியை அறிந்து அதனுடன் மனிதன் ஒன்றிப்போகிறபோது அவன் முழுமையைப் பெறுகிறான்.  நிறைவை அடைகிறான். இப்படித்தான் போதிக்கிறது டாவோயிஸம்.

டாவோயிஸ நெறிகள் ‘மும்மணிகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.  கருணை, அடக்கம், பணிவு ஆகியவையே அந்த மும்மணகள். ஐசவ உணவு உண்பதே நல்லது என்றும் இம்மதம் வலியுறுத்துகிறது.

இயற்கையை வணங்குதல், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் போன்றவை டாவோயிஸட்டுகளால் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சீன இரசவாதம், ஜோதிடம், சமையல், போர்க் கலைகள், சீன மரபு வழி மருத்துவம், மூச்சுப்பயிற்சி போன்றவை டாவோயிஸத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வருகிறது.

இம்மதம், சீனாவைத் தவிர தைவான், புருனே, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் சுமார் 20 கோடிப் பேரால் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் போகர் என்ற சித்தரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  இவர் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்.  அங்கு இவர் ‘போ யங்’ என்று அழைக்கப்படுகிறார்.

சீனாவில் டாவோயிஸம் உருவாகக் காரணமாக இருந்த லாவோட்ஸேயும், போகரும் ஒருவரே என்றும் சிலர் கூறுகின்றனர். பிறப்பால் இவர் ஒரு சீனர் என்றும் இவர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

More from the section

மத அரசியல்-49: கௌமாரம்
மத அரசியல்-48: காணாபத்தியம்
மத அரசியல்-47: சீக்கிய மதம்
மத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்?
மத அரசியல்-45: ஆசீவகம் - எழுத்தியல்