சனிக்கிழமை 19 ஜனவரி 2019

மேஷம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மேஷம் (ARIES) இது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசியும்கூட. இது ஒரு நான்கு கால் ராசி. செம்மறி ஆட்டின் உருவம் கொண்ட ராசி. இதை A என்ற அடையாளத்தால் குறிப்பார்கள். இந்தக் குறியீடு, ஒரு செம்மறி ஆடு நீண்ட மூக்குடனும், இரண்டு காதுகளுடன் இருப்பதுபோல் தெரிகிறது அல்லவா! இது ஒரு சர ராசி. அதாவது, நகரும் தன்மை கொண்ட ராசி. இதற்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்குதான் நீச்சம் பெறுகிறார். இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால், இந்த ராசியை லக்கினமாகக் கொண்டவர்கள், மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்கினம், மற்ற கிரகங்களால் கெட்ட பார்வையால் பார்க்கப்பட்டால், அவர்கள் மிகுந்த அவசரக்காரர்களாகவும், நிதானித்துச் செயல்படாதவர்களாகவும் இருப்பார்கள். அதுவே, நல்ல பார்வையால் பார்க்கப்பட்டால் நிதானம் மிக்கவர்களாகவும், தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவராகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான்.

இன்று

ஜனவரி 19 இன்று பூர்வீக சொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு.  உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

இந்த வாரம்

ஜனவரி 18 - ஜனவரி 24 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) தர்ம சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரத்தில் சிறிய தொய்வுகள் உண்டாகும். திட்டமிட்ட வேலைகளை முனைப்புடன் செய்யவும். எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் கடமைத் தவறாமல் உழைக்க முயற்சிக்கவும். வேலைகளைப் பிறகு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகள் எதிரிகளால் தொல்லை அடைவர். கூட்டாளிகளின் அவநம்பிக்கைக்கு ஆளாவீர்கள்.  விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபகரமாக இருக்கும். ஆனாலும் புதிய கழனிகளை வாங்கும் எண்ணங்களைத் தள்ளிப்போடவும்.  அரசியல்வாதிகள் செயல்கள் தடையுடன் வெற்றி அடையும். உங்களின் பேச்சை கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை நிலவும். ஆன்மிகத்தில் ஆர்வம் பெருகும். மாணவமணிகள் அறிவியல்  பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். பரிகாரம்:  புதன்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 18, 19.   சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

ஜனவரி மாத பலன்கள் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும்.  மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும். அடுத்தவர்களுக்காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. . வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். 

தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும்.

பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அஸ்வினி:
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலரின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தோரின் உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று காரியங்களை சாதிப்பீர்கள்.

பரணி:
இந்த  மாதம் பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது  கவனம் தேவை. அடுத்தவருடன்  பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்.

பரிகாரம்:  முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நண்பர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செயல்களுக்கு வரவேற்பு கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  உடன்பிறந்தோர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.  உங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் வலிமையாக எடுத்துக்கூறி சாதித்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பையே நம்பி வாழ்வீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது. உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களைத் தட்டிக் கொடுத்து செல்வீர்கள். பழைய நண்பர்களையும் மறக்க மாட்டீர்கள். எவருக்கும் அவர்கள் கேட்காமலே அறிவுரைகளைக் கூற வேண்டாம். எவரும் உங்களை இந்த காலக்கட்டத்தில் ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்றும் இந்த காலகட்டத்தில் பூர்த்தியாகும். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பல காரியங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு அவைகளைப் பதற்றமில்லாமல் செய்து முடிப்பீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்பட, யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். ஆன்மிகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.  வருமானம் சீராகவே இருக்கும். ஓரளவு பணம் மிச்சப்படும். சேமிப்புகளும் உயரும். பேச்சில் வசீகரம் கூடும். வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவீர்கள். உற்றார் உறவினர் மற்றும் உடன்பிறந்தோரிடம் பாசமாகப் பழகுவீர்கள். பெற்றோர் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். முக்கிய வேலைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். புதிய வருமானம் பெற சில திட்டங்களைத் தீட்டுவீர்கள்.  வெளிநாடுகளுக்கு உத்தியோகம் அல்லது கல்விப் பயணம் செய்ய நேரிடும். அரசு அரசாங்க  அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். நூதனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் என்றால் மிகையாகாது.  உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி கரிசனத்துடன் நடந்துகொள்வார்கள். வேலைகளை பதற்றப்படாமல்  அமைதியாகச் செய்வீர்கள். அனுபவங்களால் முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றமடைய அதிகமான முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். போட்டியின் காரணமாக நீங்கள் சற்று அதிகமான அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்.  வங்கிகளிடமிருந்து விரும்பியபடி கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.கொடுக்கல் வாங்கல்களில் இருந்த கருத்து வேறுபாடுகளும் விரோதங்களும் மறையும். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும். நீர்ப்பாசனத்தைப் பெருக்கி நல்ல விளைச்சலைப் பெற முயற்சி செய்வீர்கள். மகசூல் நன்றாக இருப்பதால் இந்த ஆண்டு கழனிகளை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும் என்றால் மிகையாகாது.  அரசியல்வாதிகள் எதிலும் எப்பொழுதும்  எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சக கலைஞர்களால் பணவசதியும் விருதுபெறும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையை காண்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பயணங்களின் போது உடைமைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும். மாணவமணிகள் சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள். வருங்காலத்திற்காக நீங்கள் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உற்சாகமான மனநிலையில் இருக்கும் அண்டாக அமைகிறது என்றால் மிகையாகாது. பரிகாரம்: பிரதோஷ காலத்தில் பார்வதி பரமேஸ்வரர்களை தரிசிக்கவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாங்களில் உங்கள் பெயர் புகழ் உயர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை கூடக் காண்பீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் பேரக்குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மந்தமாக இருந்த குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவார்கள். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்களால் எதிர்பாராத செலவினங்களும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்காக சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும். அதேநேரம் இந்த பயணம் சுபகாரியங்களுக்காக நிகழும் என்பதால் மனதில் மகிழ்ச்சிக்குக் குறைவராது. மேலும் சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபட்டு பிரபலமடையும் யோகமும் உண்டாக பாக்கியமுள்ளது.


இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவீர்கள். செய்தொழிலில் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சற்று விலகி இருந்தாலும் விட்டுக்கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள். முக்கிய தருணங்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். வெளியூரிலிருந்து அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும். குறிப்பாக, இது குழந்கைளுக்கு நன்மையாக அமையும். வெளியூர் சென்று செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். மேலும் சில நேரங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்கமாலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டமும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கடன்கள் வசூலாவதற்குத் தாமதமாகும். அதனால் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே தெரியும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். இக்காலத்தில் நீர்வரத்தும் மிகக்குறைவாக இருப்பதால் பாசன வசதிகளுக்காக சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடிவரும். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் கவனிக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உங்கள் செயல்களில் உங்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் விரிசல்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும். பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.  

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...