வியாழக்கிழமை 24 ஜனவரி 2019

கடகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கடகம் (CANCER) இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும்கூட. இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது. இந்த ராசியின் உருவம் நண்டு. இதை D என்ற குறியீட்டால் குறிப்பார்கள். அதாவது, நண்டின் கால்கள்தான் இந்த உருவம். உடல் உறுப்புகளில் மார்பையும், வயிற்றுப் பகுதியையும் குறிப்பது இந்த ராசி. இந்த ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இது ஒரு ஊமை ராசியும்கூட. பிறவியில் பேச முடியாதவர்களுக்கு வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டோடு இந்த ராசி சம்மந்தப்பட்டிருக்கும். இந்த ராசியில் குருவானவர் உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.

இன்று

ஜனவரி 23 இன்று சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

இந்த வாரம்

ஜனவரி 18 - ஜனவரி 24 (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) அலைச்சல்கள் கூடும். செயல்களில் தடைகள் உண்டாகும். இருப்பினும் தடைகள் விலகி, முடிவு வெற்றிகரமாக இருக்கும். பெயரும் புகழும் உண்டாகும்.  மன அமைதி பெறுவீர்கள். தேக நலம் சிறப்படையும்.  சிலர் வீடு மனை வாங்குவீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். வாடிக்கையாளர்களை கனிவான பேச்சினாலும் நேர்மையான நடத்தையாலும் கவர்வீர்கள்.  விவசாயிகளுக்கு எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான வசதிகளையும் பெருக்கிக்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் சகல காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் அவர்களின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களையும் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தவும்.   பரிகாரம்: பெருமாள் }தாயாரை வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 18,  21. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

இந்த மாதம்

ஜனவரி மாத பலன்கள் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
ராசியில் ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய், குரு - பஞ்சம பூர்வ  புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.   முக்கிய நபர்களின் உதவியும் கிடைக் கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான விஷயங்கள் நன்மை தரும். 

தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு  நீங்கும். .  வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு  பண வரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது.  அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். மாணவர்களுக்கு  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.  

புனர் பூசம் 4ம் பாதம்: 
இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.

பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.

ஆயில்யம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: வராகியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30, 31
 

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் குறித்த காலத்திற்கு முன்பாகவே முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடத்தொடங்கும். தேடாமலேயே விரும்பியவை கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாட்டிற்கு பயணப்படுவதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் அதிர்ஷ்ட வாய்ப்புகள்  கிடைக்கும். அரசு அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். சிலருக்கு விருது பெரும் யோகமும் உண்டாகும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் தேடி வரும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாசனை திரவியங்களை பயன்படுத்துவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.  பழைய காலத்தில் உதவி செய்வதாக வாக்களித்தவர்கள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள். உங்களின் புத்திசாலித்தனமும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகள் விரும்பிய பாடப்பிரிவுகளிலும் விரும்பிய கல்லூரிகளிலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் உங்களின் சமயோசித புத்தி கைகொடுக்கும். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களும் கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். செய்தொழில் சிறப்பான வளர்ச்சி அடையும். அரசு வேலைக்குக் காத்துக்கொண்டிருந்தவர்கள் அதைப் பெறுவார்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். வரவேண்டிய இடத்திலிருந்து பணம் கைவந்து சேரும். பங்கு மார்கெட் போன்ற துறைகளிலிருந்தும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நெடுங்காலம் விற்காமல் இருந்த நிலம், வீடு நல்ல விலைக்கு விற்பனையாகி சேமிப்புகள் உயரத்தொடங்கும். குழந்தைகள் படிப்பில் சாதனைகளைச் செய்வார்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த சங்கடங்களும் இடையூறுகளும் மறையும்.  எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.  முக்கிய முடிவுகளை தக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பின்பே எடுக்கவும். உங்கள் எண்ணங்களை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருந்து மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கவும். எவரிடமும் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு சற்று கூடும். உழைப்பிற்கேர்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் பகைமை பாராட்ட நேரிடலாம். எல்ல காரியங்களிலும் காலதாமதம் ஏற்படும். உடலில் சோர்வும் மனதில் தெளிவற்ற தன்மையும் காணப்படும்.  வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் காலம் தாழ்த்தியே பலன் தரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். கொள்முதல் லாபங்களும் தொடருமாகையால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். வேலை செய்பவர்களை அனுசரித்துச் சென்று உங்கள் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு உதவும் முக்கிய பிரச்னைகளை முன்னின்று ஒடுக்க முயல்வர். எதிரிகளின் பலம் குறையும்.  அரசு அதிகாரிகளிடம் தேவையான ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகளே கிடைக்கும். ஆக்கபூர்வமான எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலம் மனநலம் இரண்டும் சிறப்பாக அமையும். ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் சுமுகமாகப் பழகவும். மாணவமணிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். கல்வியில் ஆர்வம் குறைந்து காணப்படுவதால் ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்து படிக்கவும். ஆசிரியர்களின் ஆதரவு குறைந்து காணப்படும். பரிகாரம்: துர்க்கை வழிபாடு சிறந்தது.  ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பம்போல் செய்தொழிலை மாற்றியமைப்பீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். சிலர் செய்தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவார்கள். குழந்தைகளின் கல்விக்காக மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள். அவர்களால் குடும்பத்தின் அந்தஸ்து உயரும். பணவரவு எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே வரும். இல்லத்தில் சந்தான பாக்கியம் உண்டாகும் தீர்க்கமாக சிந்தித்து சிறப்பாக முடிவெடுப்பீர்கள். உங்கள் முயற்சிகள் எதுவும் வீண் போகாது. சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய நவீன வாகனங்களை வாங்குவார்கள். நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் இணைந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் எண்ணங்களை செய்தொழிலில் நடைமுறைப்படுத்துவீர்கள். அதனால் உண்டாகும் நற்பலன்களை கண்கூடாகவும் பார்ப்பீர்கள். கைவசம் உள்ள பொருள்களை செம்மைப்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சிறிது பகைமை, விரோதம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எவரிடமும் எதிர்வாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து மாற்றங்கள் உண்டாகி அதன்வழியே நல்ல செல்வம், செல்வாக்கு ஆகியவை பெறுவதற்கு வழி உண்டாகும். நெடுநாளாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொண்டவர்கள் சுயமாக செயல்படத் தொடங்குவார்கள். தாமாகவே நல்ல முடிவுகள் எடுத்து சிறப்பாக வெற்றிபெறுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுலபமாக நடந்தேறிவிடும். மனதிற்கினிய பிரயாணங்களைச் செய்து அதன்மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இல்லத்தில் முத்தான புத்திரப் பேறு உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவதற்கும் புனிதமான தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதற்கும் தகுந்த காலகட்டமாக அமைகிறது. வெளிநாடு சென்று வர முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைத்துவிடும். உங்களின் உள் உணர்வு சிறப்பாக வேலைசெய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். மேலும் உடலில் சிறிது சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபங்கள் வரும். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்பிவராமல் தங்கிவிட நேருமாகையால் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, கால்நடை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப் படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல்ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். உடல்சோர்வும் சில நேரங்களில் உண்டாகும். மாணவமணிகள் பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்படையுங்கள்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...