திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மகரம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மகரம் (CAPRICORN) இது ஒரு பெண் ராசி. பூமி ராசி மற்றும் சர ராசி. இதன் அதிபதி சனி. இங்குதான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். குரு நீசம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் எதற்கும் தடங்கல்களைக் கொடுப்பவராகவும், எதிலும் ஏற்றத்தை தராதவராகவும், பொறுப்புகளைக் கொடுப்பவராகவும்தான் கருதப்படுகிறார். இதுவும் ஒரு நாலு கால் ராசி. இதனுடய உருவம் ஆடு. இதனுடைய சின்னம் J. இதுதான் உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு. இது ஒரு பூமி ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் செலவைக் குறைப்பதில் நாட்டம் உள்ளவராகவும் நியாயஸ்தர்களாகவும் எதையும் யோசித்துச் செயல்படுபவர்களாகவும், கடின உழைப்பை மேற்கொள்பவராகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கு சனி அதிபதியாவதால், 6-ம் வீட்டுடன் சம்பந்தப்பட்டால் மூட்டு வலிகள், தோல் சம்மந்தமான வியாதிகள் ஆகியவை வரக்கூடும்.​

இன்று

ஜனவரி 21 இன்று சொத்து வாங்க யோகம் உண்டு. பூர்வீக சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

இந்த வாரம்

ஜனவரி 18 - ஜனவரி 24 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். உஷ்ண ஆதிக்க உபாதைகளுக்கும் வயிற்று வலிக்கும் ஆளாக நேரிடலாம். வெளியூர் பயணங்களில் அனுகூலங்களை எதிர்பார்க்க வேண்டாம். பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். சக ஊழியர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும்.  விவசாயிகள் உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவதில் சில தடைகள் ஏற்படலாம். குத்தகை எடுப்பதைத் தவிர்க்கவும்.  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நாடி அடைவர். வருமானத்திற்கு எந்தக் குறைவும் வராது.  பெண்மணிகளுக்கு வாக்குச் சாதுர்யம் கூடும். பொருளாதார நிலையில் சுபிட்சம் காணப்படும். மாணவமணிகள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.  பரிகாரம்: சுப்ரமண்யர் வழிபாடும் சூரிய வழிபாடும் சிறந்தது.  அனுகூலமான தினங்கள்:  20, 21.   சந்திராஷ்டமம்: 23,  24.

இந்த மாதம்

ஜனவரி மாத பலன்கள் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்குகள் சார்ந்த எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.வீடு மனை ஆகியவற்றில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. 

வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு  அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும்.  எங்கு இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி ஏற்படும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.  மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். 

உத்திராடம் 2, 3, 4 பாதம்: 
இந்த மாதம் மாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.

திருவோணம்:
இந்த மாதம் எதிர்பாலினரால் காரிய  அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள்  வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம்   உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.  புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24 , 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) இந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். செய்தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் அரிய உதவிகளும் கிடைக்கும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி புதிய துறைகளில் ஈடுபடுவீர்கள். தொல்லை கொடுத்து வந்த வேலைக்காரர்கள் அடங்கி வேலைச் செய்வார்கள். உங்கள் செயலாற்றும் திறனை அனைவரும் பாராட்டுவார்கள். வழக்குகளிலிருந்து நிரபராதியாக வெளிவருவீர்கள்.  குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களிடம் அனுசரணையாக இருப்பார்கள். உடன்பிறந்தோர் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். சிலருக்கு அயல்நாடு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் உங்கள் சமயோசித புத்தி கைகொடுக்கும். அமைதியாகவும் சீரிய ஒழுக்கத்துடனும் செயலாற்றுவீர்கள். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். வறியவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்தடையும். இந்த காலகட்டத்தில் மனதில் பட்டதையெல்லாம் வெளியில் பேசிவிட வேண்டாம்.  ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மனதிற்கினிய பயணங்கள் செய்ய நேரிடும். பல ஆண்டுகளாக பார்க்காமல் இருந்த நண்பர்களை இந்த காலகட்டத்தில் ஆச்சரியப்படும் விதமாகச் சந்திப்பீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.  ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராகச் சிந்திக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்றுவிட்ட வீட்டைக் கட்டி முடித்து விடுவீர்கள். புதிய வீட்டிற்கும் கிரகப் பிரவேசம் செய்வீர்கள். தனிமையில் வருந்திய நீங்கள் பிரகாசமாக உலா வருவீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் இருந்து ஆதாயம் கிடைக்கும். பெரும்பான்மையான காலம் சிறப்பாகவே செல்லும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். வேலையில் சுமை குறையும்.  விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். அதிகமாக உழைத்து இரட்டிப்பு வருமானத்தையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் போட்டியாளர்களால் சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றைச் சமாளிப்பீர்கள்.  வியாபாரத்திற்காகக் கடன் வாங்க நேரிடும். கடன்கொடுத்து வியாபாரம் செய்வதைத் தவிர்க்க முடியாது. நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உங்கள் செல்வாக்குக்கு எந்தக் குறைவும் இருக்காது. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். குடும்பத்திற்கு நன்மைகளைச் செய்ய முற்படுவீர்கள். நீர்வரத்தைச் சேகரித்துக் கொள்ள பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். சக அதிகாரிகளிடம்  உங்கள் செல்வாக்கு உயரும். உட்கட்சிப் பூசலினால் சிறிது வருத்தமடைவீர்கள். கலைத்துறையினருக்கு இது குதூகலமான ஆண்டாகும். வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வாய்ப்புகள் தானாகவே வரும். ரசிகர்களின் ஆதரவுடன் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும். குடும்பத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடுவார்கள். பெற்றோர் வழியில் சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். மாணவமணிகள் விளையாட்டில் நன்கு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். படிப்பில் நேர்த்தியுடன் ஈடுபடுவீர்கள். பாடங்களைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் படித்து முன்னேறுவீர்கள். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்  வழிபடவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாளாக சுணங்கி வந்த காரியங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் நல்லமுறையில் நடக்க ஆரம்பிக்கும். பொருளாதார விஷயங்களில் நல்ல விதமான, போக்கு தென்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்திலிருந்து வந்த கெடுபிடிகள் அகலும். மனதிலிருந்த இனம் புரியாத குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த சில விஷயங்களில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள்.  உடல் நலம் நன்றாக இருக்கும். உடல்நலம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மகான்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் மந்திர உபதேசங்களும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்துவந்த கோபதாபங்கள் நீங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.   இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதம், பெருமிதம் போன்றவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு அற்புதமாக காரியமாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படினும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுக்குப் பணம் கிடைக்கும். சிலருக்கு ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் கணிசமான லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள். செய்தொழிலை வெளியூருக்கு விரிவுப் படுத்த வேண்டாம். குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கும். அதனால் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.  கைவிட்டுச் சென்ற வாய்ப்புகளையும் மறுபடியும் தேடிச் சென்று பெறுவீர்கள். அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். எவரையும் அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் கெடுபிடியில்லாமல் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாமல் போகும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். வியாபாரத்தை சீர்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. அதனால் கொள் முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் கிடைக்கும். பழைய கடன்களும் ஓரளவுக்கு வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து ஆதரவு பெருகும். ஆனால் அதனை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.  கலைத்துறையினர் புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வசீகரமான பேச்சினால் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே செல்லும்.  உற்றார் உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல்வலிமை பெற உடற்பயிற்சிகளையும் மனவளம் பெற யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...