திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

துலாம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** துலாம் (LIBRA) இது ஒரு ஆண் ராசி. சர ராசி - காற்று ராசியும்கூட. இதன் அதிபதி சுக்கிரன். இதற்கு தராசு உருவத்தைக் கொடுத்தாலும், இதன் சின்னம் G. இது முதுகின் பின்பகுதி மற்றும் அதன் கீழ்ப்பகுதி (புட்டம்), சிறுநீரகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார். சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு. சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இந்த ராசியில் பிறந்தவர்கள், தன் கணவன் / மனைவி மேல் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவதால், இவர்களுக்கு எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் இருக்கும். எந்தப் பிரச்னையையும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதியாக இருப்பதைப்போல், எட்டாம் வீட்டுக்கும் அதிபதியாகிறார். ஆகவே, இவர்களுடைய பிரச்னைகளுக்கு இவர்களே பொறுப்பு.

இன்று

ஜனவரி 21

இன்று பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். 
பிரச்சனைகள் மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5

இந்த வாரம்

ஜனவரி 18 - ஜனவரி 24 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) மகிழ்ச்சிகரமான காலமிது. குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தீயோர் நட்பினால் பணவிரயம், கௌரவக் குறைவு போன்றவை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட காரியங்களை நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்து முடிக்கவும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய  பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டவும். விவசாயிகள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளைச் சுலபமாகச் செய்து முடிப்பார்கள்.  தானிய விற்பனையும் லாபகரமாக இருக்கும்.  அரசியல்வாதிகள் தொண்டர்களின்ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். சச்சரவு ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவார்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தவும். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பெற்றோர், ஆசிரியரை அனுசரித்துச் செல்லவும். பரிகாரம்: திங்கள்கிழமையன்று அம்பாள் தரிசனம் உகந்தது.  அனுகூலமான தினங்கள்:  19, 22.  சந்திராஷ்டமம்:  18.

இந்த மாதம்

ஜனவரி மாத பலன்கள் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - சுகஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. 

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். . பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்..

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சுவாதி:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு வர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;  தேய்பிறை: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை விரிவுபடுத்த புதிய வியூகத்தை செயல்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தயங்காமல் முடிவு எடுக்கும் திறமையினால் முன்னேற்றத்திற்கான வாசற் கதவைத் திறப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்யும்போது விதிவிலக்குகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். உற்றார் உறவினர்கள் தேடி வந்து ஆதரவு கொடுப்பார்கள். பிரச்னை ஏற்படக்கூடிய விவாதங்களில் உங்கள் கருத்தைக் கூறாமல் "கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்' என்பதுபோல் நழுவி விடுவீர்கள். திடமாகச் சிந்தித்து செயல்படுத்துகின்ற காரியங்களில் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். நீண்டகாலமாக நிலுவையிலிருந்த வழக்கு விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பெற்றோர் வழியில் இருந்த பிணக்குகள் மறைந்து சகஜ நிலை உண்டாகும். வரவேண்டிய பணம் எவ்வகையிலாவது உங்கள் கை வந்து சேர்ந்து விடும். நீண்டகால எண்ணம் ஒன்று இந்த காலகட்டத்தில் ஈடேறக் காண்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போலாகும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் உங்கள் கையை வந்தடைந்து அதிலிருந்து வருமானமும் வரத்தொடங்கும். தர்ம காரியங்களுக்கும் சிறிது செலவு செய்வீர்கள். எதிர்வரும் ஆபத்துகளை உங்கள் உள்ளுணர்வால் புரிந்து கொண்டு அவைகளின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.  நஷ்டத்தில் நடந்து வந்த தொழிலை புதுப்பித்து லாபத்துடன் இயக்குவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். வெளிவட்டாரத்திலிருந்து நல்ல செய்தியைக் கேட்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். உங்கள் பகைவர்களுக்கு தோல்வி உண்டாகும். உங்களுக்கு எதிராகப் பின்னப்பட்ட சதிவலையிலிருந்து மீண்டு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மற்றபடி சுயமுயற்சி செய்து உயர்ந்த நிலைக்கு வந்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இந்த ஆண்டு குறைவாகக் கிடைக்கும். கொடுத்த வேலைகளை குறித்த காலத்திற்குள் முடிக்க முயற்சி செய்யவும். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தையும் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் பொறுமையும் நிதானமும் அவசியம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். எவரிடமும் அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிறிய தடைகளுக்குப்பிறகு வீடு கட்ட கடன்கள் கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலைக் காணப்படும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் வருமானம் சீராக இருந்தாலும் தொழிலை பெரிய அளவுக்கு விரிவுபடுத்த முடியாத அளவுக்கு இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய குத்தகைகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். புதிய வாழ்க்கை வசதிகளும் பெருகும். விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்லவும்.  அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையோடு நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். பொதுச்சேவையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். தொண்டர்களை அனுசரித்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். பணவரவுக்கும் குறைவு வராது. சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்.  பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நல்ல மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானைவழிபடவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று பிரபலஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். செய்தொழிலைச் செம்மையாக நடத்துவீர்கள். உங்களுக்குக்கீழ்  வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி அடையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும்.  வெளிவட்டாரத்தில் பரபரப்பாகச் செயலாற்றுவீர்கள். அதேநேரம் குழந்தைகள் வழியில் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். மேலும் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். சிலர் சிறிதளவு முதலீடு செய்து பெரிய அளவுக்கு தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம்.  பெற்றோர்களின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்களுக்கு சிறிது மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மற்றபடி நேரடியாகவோ மறைமுகமாகவே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளும் லாவகமாகச் சமாளித்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானத்திற்கு எந்தவிதக் குறைவும் இருக்காது. குடும்ப ஒற்றுமை நல்ல விதத்தில் காணப்படும்.  கூட்டாகத் தொழில் செய்தவர்கள் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு தனித்து செயல்படத் தொடங்குவார்கள். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் சிறிது தோக்கம் காணப்படுவதால் அவர்களை சற்று கூடுதலாக கவனிக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்பாளர்கள் உங்கள் காலை வாரிவிட திட்டமிடுவார்கள்.  சமயோஜித புத்தியால் சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தோரை அரவணைத்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பேச்சில் கண்ணியமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். சிலருக்கு திடீரென்று வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  சிலருக்கு வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மாற்றம் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகளும் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடம்பில் இருந்த சோர்வும் மனதிலிருந்த தெளிவின்மையும் அகன்று மிடுக்குடன் நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை முனைப்புடன் செய்வீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வர். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.  பொருளாதார வளம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். நீர் வளத்தால் உங்கள் எண்ணங்கள் பலிதமாகும். புதிய குத்தகைகளினால் லாபம் கொட்டும்.  வயல் நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள். பால் வியாபாரத்தால் பலன் உண்டு. அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மாற்று கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினரின் அனைத்து காரியங்களும் சுமுகமாகவே முடிவடையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார வசதி மேம்படும்.  புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.  பரிகாரம்: ஸ்ரீ ராமரை ராமநாமத்தை ஜெபித்தபடி  வழிபடவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...