வெள்ளிக்கிழமை 15 பிப்ரவரி 2019

மீனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). ***​ மீனம் (PISCES) (இது ராசி மண்டலத்தின் கடைசி ராசி; இது ஒரு பெண் ராசி. உபய ராசி. இரட்டை ராசி. இதன் உருவம் இரண்டு மீன்கள். இதன் சின்னம் L. இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில் பிணைத்திருப்பது போன்றது. உடல் உறுப்புகளில் கால்களைக் குறிக்கிறது. இங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். புதன் நீச்சம் பெறுகிறார். இந்த ராசியானது சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு ராசி. இங்கு சூரியன் இருந்தால், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். ஏனெனில், சூரியன் 6-ம் வீட்டு அதிபதி அல்லவா? இங்கு சந்திரன் இருந்தால் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். செவ்வாய், இருந்தால், கால்களில் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். புதன் இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு இருந்தால், கால்களில் வீக்கம், அடிவயிற்றில் கட்டிகள் போன்றவை ஏற்படக்கூடும். சனி முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.

இன்று

பிப்ரவரி15  இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9


 

இந்த வாரம்

பிப்ரவரி 8 - பிப்ரவரி 14 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு மரியாதை  உயரும். சகோதரி உறவில் சற்று விரிசல்கள் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச் சுமை குறையும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக்கொள்வீர்கள்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷம் காண்பார்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுக்கவும். மாணவமணிகள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தவும். பரிகாரம்: ராகுகாலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 8, 9.  சந்திராஷ்டமம்: இல்லை. 

இந்த மாதம்

பிப்ரவரி மாத  பலன்கள் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரக நிலை:
ராசியில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
எதையும் சாதிக்க காத்திருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்லவையும் தீயவையும் மாறி மாறி வரும். மாதத்தின் மத்தியில் எடுக்கும் முயற்சிகள் கை கூடும். வரவுக் கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். ஏழரை சனியில் பிடியில் இருக்கும் உங்கள் மீது செவ்வாயின் பார்வையும் படிவதால் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். 

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. கலைத்துறையினருக்கு அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சுமூகமாக முடியும். உங்கள் துறை சார்ந்த அறிவை பெருக்கிக் கொள்வீர்கள். அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.  பணிகள் மிகவும் சுமூகமான முடிந்து உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 4 - ம்பாதம்:
இந்த மாதம்  கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

உத்திரட்டாதி:
இந்த மாதம்  குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

ரேவதி:
இந்த மாதம்  திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மன நிம்மதி ஏற்படுத்தித் தரும். பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019  (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)   இந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். ஒதுக்கி வைத்திருந்த காரியங்களையும் செய்யத் தொடங்குவீர்கள்.  செய்தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். புதிய வீடு வாங்கி நூதன கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடலுபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  குழந்தைகளுடன் உங்கள் காலநேரங்களை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். சிலர்  வெளிநாட்டுக்கு பயணிப்பீர்கள். நெடுநாளாக தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும். உபரி வருமானம் நிரந்தர வருமானமாக மாறும். ஆழ் மனத்தியானம் போன்ற மறைமுகக் கலைகளைக் கற்று, மற்றவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள்.  ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பணவரவு திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும் பதவியும் உங்களை பலப்படுத்தும். மதிப்பு மரியாதை உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். நெருங்கியவர்களுக்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்று உங்கள் கௌரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.  புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே தொடரும். வழக்குகள் சாதகமாகவே முடியும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து பாகப்பிரிவினை சுமுகமாக முடியும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்வார்கள். சிலர் வேலை மாற்றம் செய்வார்கள். அதனால் ஊதிய உயர்வினைப் பெறுவார்கள். இந்த ஆண்டு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். அலுவலகத்தில் வண்டி, வீடு வாங்குவதற்கான விண்ணப்பங்கள் சாதகமாக பைசலாகும். சக ஊழியர்கள் உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  வியாபாரிகள் வியாபாரத்திலிருந்த மந்தநிலை மாறி லாபங்கள் வரும். புதிய முதலீடுகளில் ஈடுபட நேரிடும். போட்டி, பொறாமைகள் குறையும். விவசாயிகள் மகசூல் வருமானம் படிப்படியாக உயரும். நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் செய்யும் செலவுகள் பலனளிக்கத் தொடங்கும். கையிருப்புப் பொருள்கள்மீது அக்கறை அதிகரிக்கும். நிலத்தின்மீது போதிய கவனம் செலுத்தவும். மண்ணின் வளம் குன்றாமலிருக்க இயற்கை உரங்களை பயன்படுத்தவும். கால்நடைகள் மூலம் வருமானத்தைக் கூட்டிக் கொள்வீர்கள்.  அரசியல்வாதிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆண்டாக அமைகிறது. தொண்டர்களின் அலட்சியப் போக்கு உங்களை திருப்திப் படுத்தும். உங்கள் சொல்லுக்கு கட்சி மேலிடம் செவி சாய்க்கும். மக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினரின் அவநம்பிக்கைகள் அகலும். நற்பெயர் எடுக்க முனைவார்கள். நழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடிவரும். துறையில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். பெண்மணிகள் குடும்ப நலம் சீரடையும். பெற்றோர்களின் ஆதரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகளின் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். ***** தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராது வருவது வரட்டும் என்று காரியமாற்றுவீர்கள். இறுதியில் வெற்றியும் பெறுவீர்கள். நல்லவர்கள் தானாகவே úடிவந்து நட்பு கொள்வார்கள். குடும்ப ஒற்றுமை முன்னிலும் பலமாக அமையும். தொழில் வகையில் பிரச்னை என்று எதுவும் வராது. எதிர்ப்புகள் இருப்பினும் அவைகள் கூடிய மட்டும் பலகீனமுடையதாகவே இருக்கும். அசையாச் சொத்து வகையில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். அதன் வழியில் நல்ல பெயர் ஏற்படுவதுடன் மனநிறைவும் உண்டாகும். உங்கள் மனிதாபிமான சிந்தனையால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.  அரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான  உதவிகள் செய்வார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஓடி ஆடி கடமையுடன் உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். தடைபட்டிருந்த கட்டடப் பணிகளையும் தொடர்ந்து முழுமையாக முடித்து கிரகப்பிரவேசத்தையும் செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய யுக்திகளைக் கற்று நிபுணத்துவம் பெறுவீர்கள். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்திக் கொண்டு விழிப்புடன் செலவழிக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் பகைமை மறைந்து நேசமுண்டாகும். கொடுக்கல் வாங்கல்களில் சரளமான போக்கு தென்படும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகமாக தொழில் செய்தவர்கள் நிரந்தரமாகத் தொழில் செய்வார்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து கௌரவமும் அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கும். குடும்பத்துடன் அயல்நாடுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள்.  உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.  தன்னம்பிக்கை கூடும். போட்டிகளைச் சுலபமாக எதிர்கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். ஞானிகள் மகான்களின் தரிசனம் சிரமமின்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி அங்கே குடியேறுவார்கள். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் இராது. சென்ற இடமெல்லாம் புகழ் என்று கூறலாம். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடன் நீங்கள் செயல்படுகிற காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடிவரும். வருமானம் சீரும்சிறப்புமாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்குமென்றாலும் உங்களின் பேச்சினால் சில அபவாதங்களையும் தேடிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் சுமுகமான உறவுநிலை தொடருவதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத்திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்களை அடைத்துவிடும் ஆண்டாகும். வியாபாரத்தைப் பெருக்க புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.  விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் அனைத்து வளமையை கூட்டிக்கொள்ள முற்படுங்கள். விளைச்சல் திருப்திகரமாக இருக்குமாகையால் விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும்.   அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கனிவான பார்வை உங்கள் மீது விழும். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கி விடுவார்கள். புதிய முயற்சிகளை தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பின்பே  செயல்படுத்தவும். கலைத்துறையினர் படிப்படியாக வளர்ச்சியைக் காண்பார்கள். சக கலைஞர்களால் நன்மைகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். அறிவாற்றலும் பெருகும். ஞாபக சக்தியும் கூடும்.  பரிகாரம்: "நமசிவாய' என்று ஜபித்து சிவபெருமானை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...