திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

விருச்சிகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** விருச்சிகம் (SCORPIO) இது ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி; ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். இதனுடைய சின்னம் H. இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர். இந்த ராசிக்கு 6-ம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும்.

இன்று

ஜனவரி 21 இன்று புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பை தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

இந்த வாரம்

ஜனவரி 18 - ஜனவரி 24 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) உங்கள் பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். இதனால் மருத்துவச் செலவுகள் குறையும். முழங்கால் வலியால் அவதிப்பட்டவர்கள் நிவாரணம் அடைவர். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வீண் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுகூலமாக இருப்பார்கள். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீராக வருமானத்தைக் காண்பார்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். கால்நடைகளின் மூலம் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள்.  அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் நல்ல விதமாகப் பழகி அவர்களின் உதவியைப் பெறவும்.  கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள், மீண்டும் கையைத் தேடிவரும்.  பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும்.  மாணவமணிகள் அதிகமாக உழைத்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.  பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழி(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)படவும்.   அனுகூலமான தினங்கள்: 18, 23.  

சந்திராஷ்டமம்: 19, 20.
 

இந்த மாதம்

ஜனவரி மாத பலன்கள் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். 

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். 
கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான்  தப்பித்துக் கொள்ள வேண்டி வரும்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.  மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. . 

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம்  குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.

அனுஷம்: 
இந்த மாதம்  கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல்  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 

கேட்டை:
இந்த மாதம் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.  உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும்.

பரிகாரம்:  வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருக பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்  உண்டாகும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் சரியான இலக்கை நோக்கிச் செல்லும். அரசு வகையில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் உங்களது முக்கியத்துவம் கூடும். சோம்பலை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவி, உங்களுடன் நட்புகொள்ள அந்தஸ்திலுள்ளவர்கள் விரும்புவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.    பெற்றோர்களின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றமும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்களின் வளர்ச்சிக்கு சமுதாயத்தில் அந்தஸ்தானவர்கள் உதவுவார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வருமானம் சீராக இருப்பதால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். சண்டைச் சச்சரவுகள் முடிவடையும். சிலர் வெளியூர் வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.  மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். கூட்டுத்தொழிலில் லாபமும்  கூட்டாளிகளிடம் நேசமும் மற்றும் அவர்களின் அபிமானமும் உண்டாகும். பயணங்களால் லாபம் உண்டாகும். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களில் வெற்றி தேடி வரும். எவருடன் பழகுகிறீர்களோ அவர்களால் நற்பலன்கள் பெறுவீர்கள். அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். பெயரும் புகழும் உயரும். உடன்பிறந்தோர் மூலம் நலமுண்டாகும்.  செயற்கரிய சாதனைகள் செய்யவும் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறவும் வாய்ப்பும் யோகமும் உண்டாகும். எதிர்பாராத வகையில் புதிய சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய இடங்களுக்குச் சென்று  அங்கு சிறிதுகாலம் தங்கி வருமானம் உயரக் காண்பீர்கள். மறைமுகமாக பகைமை பாராட்டியவர்கள் பலமிழந்து உங்களுக்கு கைகொடுப்பார்கள். குழந்தைகளிடம் விட்டுக்கொடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். கடினமாக உழைத்து செயலாற்றுவீர்கள். உடல் உபாதைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். நிர்வாகத் திறன் கூடும். முயற்சிகளை நேர்வழியிலேயே செய்யவும். போட்டிபந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அந்தஸ்தும் கௌரவமும் கூடும். சிலருக்கு அலுவலக பயிற்சிக்காக வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதுடன் மேலதிகாரிகளின் நம்பிக்கைகளுக்கும் பாத்திரமாவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் ஆலோசித்து ஈடுபடவும். கடன்கள் அடையத் தொடங்கும்.  விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து அதனால் நல்லெண்ணத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கடன்கள் கிடைத்து விளைச்சலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.  அரசியல்வாதிகள் முயற்சிக்குத் தகுந்த பாராட்டுகளை கட்சி மேலிடத்திடம் இருந்து பெறுவீர்கள். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மேன்மையடைவீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள். வெளியிலும் உங்கள் புகழ், செல்வாக்கு உயரும். மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் புகழும் பெருமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முயற்சியும் உழைப்பும் நன்மை பயக்கும். கைநழுவிப்போன வாய்ப்புகளும் மறுபடியும் உங்கள கைக்கே வந்து விடும்.  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியை பெற்று ஆன்ம பலத்தைக் கூட்டிக் கொள்ளுவீர்கள். எதையும் புரிந்து கொண்டு செயல்படவும். வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். உடன்பிறந்தோரிடமிருந்த மனக்கசப்புகள் மறைந்து சகஜ நிலைமை உருவாகும். மாணவமணிகளின் நினைவாற்றல் பெருகும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வரவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018  (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களும் அனுகூலமாகவே முடியும். வருவாயும் வழக்கத்திற்கு மாறாகவே கூடுதலாக இருக்கும். தொழில் வழிச் சிந்தனையாளர்களை நன்கு செயல்படச் செய்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களுக்கென்று குடும்பத்திலும் வெளியிலும் ஒரு தனி மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள்.  பொருளாதாரத்தில் வளர்ச்சி பெருகிக் கொண்டே போகும். சொல்லும் சொல் வாக்கு பலிதமுடையதாக இருக்கும். வசிக்கும் வீட்டை நவீனமயமாக்குவீர்கள். ஆன்மிகம் தத்துவம் போன்றவற்றில் மனதைச் செலுத்துவீர்கள். இடம் விட்டு இடம் மாறி செய்தொழிலைச் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூல சலுகைகள் தேடிவரும். குடும்ப விஷயங்களில் மூன்றாவது மனிதரின் தலையீட்டைத் தவிர்க்கவும். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த காலகட்டத்தில் சாதகமாக இராது. இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் இதுவரை நினைத்ததற்கு நேர்மாறாக நடந்து வந்த காரியங்கள் மனதிற்கு பிடித்தபடி முடிவடையும். மனதில் புதிய நம்பிக்கை உதயமாகும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் யாவும் விலகி விடும். உற்றார் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். புதிய கடன்கள் எதுவும் வாங்க நேரிடாது. மனதில் இருந்த சஞ்சலங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தோருக்கு  உபகாரங்கள் செய்தாலும் திருப்திபடுத்த முடியாது.  தீவிர முயற்சியின் பேரில் கடன்வாங்கி புதிய வீடு கட்டவும் சந்தர்ப்பங்கள் கூடிவரும். வெளியிடத்திலிருந்து வர வேண்டிய பணநிலுவைகளும் சிரமத்தின்பேரில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்தோரின் நட்பு கிடைக்கும். இதனால் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். சிலர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் சௌகரியங்களை எதிர்பார்க்காமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். பண விஷயங்களை உங்கள் நேர்ப்பார்வையில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வருமானத்தைப் பங்குபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள்.  அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப் படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்கு பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் மனநிம்மதி அடைவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசித்து எடுக்கவும். மாணவமணிகள் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.  பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...