திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

கன்னி

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கன்னி (VIRGO) இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது. இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று

ஜனவரி 21 இன்று பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

இந்த வாரம்

ஜனவரி 18 - ஜனவரி 24 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) மகிழ்ச்சிகரமான காலமிது. குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். தீயோர் நட்பினால் பணவிரயம், கௌரவக் குறைவு போன்றவை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட காரியங்களை நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்து முடிக்கவும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய  பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டவும். விவசாயிகள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளைச் சுலபமாகச் செய்து முடிப்பார்கள்.  தானிய விற்பனையும் லாபகரமாக இருக்கும்.  அரசியல்வாதிகள் தொண்டர்களின்ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். சச்சரவு ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவார்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தவும்.  பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள்.  மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பெற்றோர், ஆசிரியரை அனுசரித்துச் செல்லவும். பரிகாரம்: திங்கள்கிழமையன்று அம்பாள் தரிசனம் உகந்தது.  அனுகூலமான தினங்கள்:  19, 22.  சந்திராஷ்டமம்:  18.

இந்த மாதம்

ஜனவரி மாத பலன்கள் (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த பண உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.  குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தை களால் சிக்க லான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.   மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்..

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

அஸ்தம்:
இந்த மாதம் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். 

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். நோய்கள் தீரும். 

பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்:  15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த குழப்பங்கள் விலகிவிடும். மனம் ஒருநிலைப்படும். முன்யோசனையுடன் செயல்களைச் செய்வீர்கள். வறுமையிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் படிப்படியாக கூடத் தொடங்கும். பொன்பொருள் சேர்க்கையும் உண்டாகும். செயல்களில் அவசரம் காட்டாமல் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.  எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். அகந்தை அகன்று அனைவரிடமும் பணிந்து செல்லும் சுபாவம் கூடும். இதனால் எளிமையாக படாடோபம் இல்லாமல் காரியமாற்றுவீர்கள். உங்களை ஏமாற்ற நினைத்தவர்களே ஏமாறுவார்கள். தெய்வக் காரியங்களில் மனதைச் செலுத்துவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை முன்கூட்டியே புரிந்து கொள்வீர்கள்.  ஏழைஎளியவர்களுக்கும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கும் உதவி செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். பதவி உயர்வு, புதிய பொறுப்புகளும் கிடைக்கும். மற்றவர்கள் உங்கள் அறிவுரையை கேட்பார்கள். ஆற்றலுடன் சாதனைகள் செய்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கு ஏற்றபடி செலவுகளையும் விரயங்களையும் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக்கொள்வீர்கள். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நயமாகப் பேசி பழகுவீர்கள். செயல்களில் குறுக்கு வழியைத் தவிர்த்து நேரிடையாகச் செய்து முடிப்பீர்கள். நெடுநாள்களாக பாதிக்கப்பட்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். சமுதாயத்தில் பெருமைமிக்க புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். வேகமாக இயங்குவீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புனிதப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசு வழியில் சிலருக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். பேச்சில் கண்ணியம் கூடும். உங்களை கேலி பேசியவர்கள் மதித்து நடந்துகொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு கவனம் சிதறாமல் வேலைகளை பட்டிலிட்டு உழைப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். அலுவலக ரீதியான பயணங்களில் நன்மை உண்டாகும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டு உங்களை திக்குமுக்காடச் செய்யும்.  இவ்வாண்டு உழைப்பு வீண் போகாது.  வியாபாரிகள் கூட்டுத்தொழிலில் நன்மைகளைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள், புதிய சரக்குகளை வாங்கி கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகள் உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களை அதிகமாக நம்ப வேண்டாம். கால்நடைகளை கவனமாக பராமரிக்கவும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். பல வழிகளிலும் வருமானம் கிட்டும். தங்களைச் சார்ந்துள்ள கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயல்வீர்கள். எதிரிகளின் தந்திரங்களை எச்சரிக்கையுடன் கவனித்து வரவும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே யோசித்துச் செயல்படவும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழுவதால் எதையும் ஓர் உத்வேகத்துடன் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.  கலைத்துறையினர் இந்த ஆண்டு வரவேற்புகள் அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் எழும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டாம்.  பெண்மணிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார்.  குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து அமைதி நிலவும். உங்கள் வாக்குச் சாதூர்யம் கூடும். பொருளாதார நிலையில் சுபிட்சம் காணப்படும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படியாக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் ஒற்றுமையுடன் இருக்கவும். பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு  சிறப்படையுங்கள். *****   தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒருமித்த ஒன்று போன்ற வரவேற்பையும் கொடுத்து அன்னியோன்யமாகப் பழகி நற்பெயர் எடுப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமமாக ஏற்றுக்கொண்டு நடப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருந்தாலும் அனாவசியச் செயலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக குடும்பம் நடத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைக்கும். அரசாங்க தொடர்புகளில் கூடுமான வரையில் சாதகமான பலன்களும் சலுகைகளும் கிடைக்கும்.  குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். நீண்ட காலமாக உடல் உபாதைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகி பூரண ஆரோக்கியம் பெறுவார்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறிச் செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ட துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் மறைந்து சகஜ நிலை உருவாகும். இழந்த அளவுக்கு மீண்டும் பொருள் கை வந்து சேரும். கடந்த பல ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் மளமளவென்று முடியும்.  உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். அயர்ச்சி, பலகீனம், இயலாமை, சோம்பல் போன்றவைகள் அனைத்தும் மாறி புத்துணர்ச்சியுடன் காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அசையாச் சொத்துகள் விஷயத்தில்  ஒதுக்கி வைத்திருந்த திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கூடி வரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். மேலும் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் தீர்ந்து விடும். உங்களின் ஆற்றலும் திறமையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். செய்தொழிலை மேம்படுத்த பயணங்களை மேற்கொள்வீர்கள். சொல்லும் சொல் பயனுள்ளதாக இருக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உடல்நலத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோர் உங்களுக்கு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் தேடிவரும்.  மனதிற்கினிய ஆலய வழிபாடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் வேறு இடங்களுக்கு மாறிச் சென்று காரியமாற்றும் காலகட்டமிது.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள், குற்றமற்றவர் என்று நிரூபணமாகி வேலையில் சேர்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். கடன் பிரச்னையை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தையில் உங்கள் விளைபொருள்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சமுதாய நோக்குடைய எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்பார்ப்புகள் அகலும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். புதிய பாணியில் திறமையை வெளிப் படுத்துவார்கள். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையை காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வர சிறப்புகள் கூடும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...