சனிக்கிழமை 20 ஜூலை 2019

ஜோதிட கேள்வி - பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வரன் உள்ளூரில் அமையுமா? மண வாழ்க்கை, வேலை, ஆயுள், எதிர்காலம் எவ்வாறு அமையும்?
- வாசகர், திருவண்ணாமலை

எனது மகளுக்கு செவ்வாய்தோஷம் உள்ளதா? எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
 - வாசகர், திருவண்ணாமலை

எனக்கு சர்க்கரை நோய், தலைசுற்றல் உள்ளது. எப்போது பூரண குணம் கிடைக்கும்? பரிகாரம் தேவையா? ஆயுள் எப்படி இருக்கும்? கணவரின் ஆயுளை பாதிக்குமா? அருள் தரும் தெய்வம் எது?
 - வாசகி, மதுரை

எனது மகனுக்கு ஜனன நட்சத்திரங்களாக இரு வேறு நட்சத்திரங்களைக் ( கார்த்திகை, ரோகிணி) கூறியுள்ளனர். இவற்றில் எது சரி? பட்ட படிப்பை முடிப்பாரா? அரசுப்பணி கிடைக்குமா? அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
 - வாசகர், புதுச்சேரி

என் மகளுக்கு திருமண பாக்கியம் உண்டா? காலதாமதம் ஏன்? எப்போது திருமணம் கைகூடும்?
 - வாசகர் பெரம்பூர்

என் மகன் எம்.இ., பட்டதாரி. வயது 31. போக்குவரத்துத்துறை, பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை கிடைத்தும் தவிர்த்துவிட்டார். இவரது விருப்பப்படி பெண் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அப்பெண்ணை திருமணம் செய்ய விரும்பவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - வாசகர், திருச்சி

எங்கள் இளைய மகனுக்கு பல வருடங்களாக பெண் பார்த்தும் இன்னும் அமையவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்?
 - வாசகர், விழுப்புரம்

ஜோதிடர் ஒருவர் என் ஜாதகத்தில் கோஹத்தி தோஷம் உள்ளது என்றும் செவ்வாய்+ கேது இணைவு வெளிநாட்டில் வேலை என்றும் கூறியுள்ளார். உள்நாட்டிலேயே அரசு அதிகார வேலை (ஐபிஎஸ்) கிடைக்குமா? சனி, பாதகாதிபதி இணைவு பொன், பொருள் நிறைந்த பெண், வீடு, வாகனத்தை பெற்றுத் தருமா?
 - வாசகர், கடம்பூர்

என் வயது 52. +2 படிப்பு. எனக்கு அதிகம் படித்த பெண்ணை நான் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த பின்னர் ஒன்று சேர்ந்து வாழவில்லை. கோர்ட் மூலமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கிடைத்தது. அதன்பின்னர் மறுமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தொழில் சரியாக நடைபெறவில்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன். இரண்டாவது மனைவியும் எள்ளிநகையாடுகிறார். விவசாயம் செய்யலாமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?
 - வாசகர், ஸ்ரீவில்லிபுத்தூர்

எங்கள் மகன் பி.இ., எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளார். தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? பெண் சொந்தத்தில் அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
 - வாசகர், ராசிபுரம்