செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

விற்பனையில் ஆல்ட்டோவை முந்தியது டிஸைர்

DIN | Published: 21st August 2018 12:49 AM


மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வரும் ஆல்ட்டோ கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் கார்கள் என்ற பெருமையை அதே நிறுவனத்தின் டிஸைர் ரகக் கார்கள் பெற்றுள்ளன.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஜூலை மாத வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதத்தைப் பொருத்தவரை, மாருதி சுஸுகி நிறுவனத்தின் டிஸைர் ரகத்தைச் சேர்ந்த 25,647 கார்கள் விற்பனையாகி, பயணிகள் வாகன விற்பனையில் முதலிடத்தைப் பெற்றன.
முந்தைய 2017-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 14,703-ஆக இருந்தது. மேலும், விற்பனை வரிசையில் முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்தில் டிஸைர் கார்கள் 5-ஆவது இடத்தில் இருந்தன. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த ஆல்ட்டோ கார்கள், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 23,371 மட்டுமே விற்பனையாகி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டன. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான ஆல்ட்டோ கார்களின் எண்ணிக்கையான 26,009-உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

More from the section

ஐஓசி நிதி விவகாரப்பிரிவு இயக்குநராக ஏ.கே.சர்மா மீண்டும் நியமனம்
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு
எல்&டி நிறுவனத்துக்கு விமான நிலைய கட்டுமான ஒப்பந்தம்
கூகுள், முகநூலுக்கு புதிய வரி: நியூஸிலாந்து அரசு திட்டம்
மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்க முடிவு: ரிசா்வ் வங்கி