புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

மஹிந்திராவின் மராஸோ' கார் அறிமுகம்

DIN | Published: 04th September 2018 12:46 AM

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய மராஸோ' காரை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இது, டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா காருக்கு போட்டியாக விளங்கும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திராவின் செயல் இயக்குநர் ஆனந்த் மஹிந்திரா  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய சந்தைகளுக்காக பிரத்யேகமாக சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்ட மராஸோ' பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வட அமெரிக்கா, டெட்ராய்ட் மற்றும் மஹிந்திரா ரிசர்ச் வேலி இணைந்து இப்புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் காரை மேம்படுத்துவதற்காக மட்டும் 20 கோடி டாலரை (ரூ.1,380 கோடி) செலவிட்டுள்ளோம். 10 சதவீத இறக்குமதி பாகங்களைக் கொண்டே இக்கார் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மராஸோ' சொகுசு கார் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டி15 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு, எட்டு பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய காரின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.99 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

More from the section

பங்குச் சந்தையில் தொடர் சரிவு
தொழில்முனைவுக்கான விதிமுறைகள் தளர்வு புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும்
ஓலாவில் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு
ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முடிவு
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு