புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

காப்பீட்டுத் துறை வர்த்தகம் 28,000 கோடி டாலரை எட்டும்'

DIN | Published: 11th September 2018 01:01 AM


இந்திய காப்பீட்டுத் துறை வர்த்தகம் வரும் 2020-ஆம் நிதியாண்டுக்குள் 28,000 கோடி டாலரை எட்டும் என அசோசெம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2001-ஆம் ஆண்டில் காப்பீட்டுத் துறையின் பரவலாக்கம் என்பது 2.71 சதவீதம் அளவுக்கே இருந்தது. இது, 2017-இல் 3.7 சதவீதத்தை எட்டியுள்ளது. மேலும், மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டம் காப்பீட்டுத் தேவைக்கான அவசியம் குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 2011-12-இல் 4,900 கோடி டாலராக இருந்த (ரூ.3.2 லட்சம் கோடி) மொத்த பிரீமியம் 2017-18 நிதியாண்டில் 7,200 கோடி டாலராக (ரூ.5 லட்சம் கோடி) வளர்ச்சி கண்டது.
இதனை கருத்தில் கொள்ளும் போது, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் காப்பீட்டுத் துறை வர்த்தகம் 28,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19 லட்சம் கோடி) எட்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் பொதுக் காப்பீட்டில் 48 சதவீத பங்களிப்பையும், ஆயுள் காப்பீட்டில் 29 சதவீத பங்களிப்பையும் வழங்கி வருகின்றன. எனவே, எதிர்காலத்தில் தனியார் துறை நிறுவனங்களுக்கு காப்பீட்டுத் துறையில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.
 

More from the section

பங்குச் சந்தையில் தொடர் சரிவு
தொழில்முனைவுக்கான விதிமுறைகள் தளர்வு புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும்
ஓலாவில் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு
ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முடிவு
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு