புதன்கிழமை 23 ஜனவரி 2019

பயணிகள் வாகன விற்பனை 2.46% குறைந்தது

DIN | Published: 12th September 2018 12:59 AM


உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சென்ற ஆகஸ்டிலும் 2.46 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டு சந்தையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 2,87,186-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனையான 2,94,416 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 2.46 சதவீதம் குறைவாகும். கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் எதிரொலியாகவே விற்பனை மந்த நிலையைக் கண்டது. மேலும், தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையும் வாகன விற்பனையில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும்பட்சத்தில் அதன் பாதிப்புகளை குறுகிய கால அளவில் உணர முடியாது. ஆனால், நீண்ட கால அளவில் அதன் பாதிப்புகளை காணலாம்.
இருசக்கர வாகன விற்பனை குறைந்து போனதற்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் புதிய வாகனங்களை வாங்குவதற்கு மேற்கு வங்க அரசு தடைவிதித்ததே முக்கியகாரணம். 
கார் விற்பனை 1,98,892 என்ற எண்ணிக்கையிலிருந்து 1.03 சதவீதம் சரிந்து 1,96,847-ஆக காணப்பட்டது.
இதற்கு முன்பு ஜூலை மாதத்திலும் பயணிகள் வாகன விற்பனை 2,99,066-லிருந்து 2.71 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2,90,960-ஆக காணப்பட்டது. அம்மாதத்தில் கார் விற்பனையும் 1,92,845 என்ற அளவிலிருந்து குறைந்து 1,91,979-ஆக இருந்தது. 
மதிப்பீட்டு மாதத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை 6.18 சதவீதம் வளர்ச்சி கண்டு 12,06,512-ஆக இருந்தது. அதேசமயம், ஸ்கூட்டர்கள் விற்பனையானது 6,73,444-லிருந்து குறைந்து 6,69,416-ஆக காணப்பட்டது.
மொத்த இருசக்கர வாகன விற்பனை சென்ற ஆகஸ்டில் 2.91 சதவீதம் உயர்ந்து 19,46,811-ஆக இருந்தது. வர்த்தக வாகன விற்பனை சிறப்பான அளவில் 29.56 சதவீதம் வளர்ச்சியடைந்து 84,668-ஆக காணப்பட்டது.
அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மோட்டார் வாகன விற்பனை சென்ற ஆகஸ்டில் 3.43 சதவீதம் அதிகரித்து 23,81,931-ஆக இருந்தது என எஸ்ஐஏஎம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 

More from the section

பணி​யா​ளர்​க​ளுக்கு பங்கு விற்​பனை: ரூ.217 கோ​டியை திரட்​டி​யது இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி
டிவி​எஸ் மோட்டார் லாபம் ரூ.178 கோ​டி​யாக அதி​க​ரிப்பு
நிஸா​னின் புதிய கிக்ஸ் கார் அறி​மு​கம்
எஸ்​பிஐ லைஃப் இன்​சூ​ரன்ஸ் புதிய பிரீ​மி​யம் வசூல் 32% அதி​க​ரிப்பு
சார்டட் ஸ்பீடு நிறு​வ​னத்​தின் பொதுப் பங்கு வெளி​யீட்​டுக்கு செபி அனு​மதி