வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிகர லாபம் 22 சதவீதம் அதிகரிப்பு

DIN | Published: 12th September 2018 12:59 AM


பொதுத் துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) முதல் காலாண்டு லாபம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பிஎஃப்சி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.7,027.50 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,728.60 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
நிகர லாபம் ரூ.1,122.43 கோடியிலிருந்து 22 சதவீதம் உயர்ந்து ரூ.1,373.26 கோடியாக காணப்பட்டது என பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் மின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதாகும்.
 

More from the section

ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு
கோதுமை உற்பத்தி சாதனை அளவை எட்டும்
நவீன 5ஜி ரக ஸ்மார்ட்போன்: சாம்சங் முதன் முதலில் அறிமுகம்
பங்குகளை வாங்க நிப்பான் லைஃப் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கேப்பிட்டல் அழைப்பு
பங்குச் சந்தையில் தொடர் விறுவிறுப்பு