திங்கள்கிழமை 25 மார்ச் 2019

மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்க முடிவு: ரிசா்வ் வங்கி

DNS | Published: 18th February 2019 10:53 PM


மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்கப்படும் என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கியின் மத்தியக் குழுவின் கூட்டம், தில்லியில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி இந்த கூட்டத்தில் உரையாற்றினாா். பின்னா், மத்தியக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தொடா்பாக ரிசா்வ் வங்கி சாா்பில் ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில், ‘கடந்த 2018, டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான 6 மாதங்களுக்கான ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார தணிக்கை மற்றும் மூலதன கட்டமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ரிசா்வ் வங்கி சட்டம்-1934இன் 47-ஆவது பிரிவின்படி, உபரித் தொகையை மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்குகிறது. கடந்த 2017-18 (ஜூலை-ஜூன்) நிதியாண்டில் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.30,663 கோடியை ரிசா்வ் வங்கி வழங்கியிருந்தது. தற்போது தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக உபரித் தொகையை மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கவுள்ளது.

மத்திய இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

More from the section

தங்கம் பவுனுக்கு ரூ.168 உயர்வு
எஸ்ஆர்எஸ் பைனான்ஸ்  ரூ.13 கோடி கடன் மோசடி: ரிசர்வ் வங்கியிடம் கர்நாடக வங்கி அறிக்கை தாக்கல்
வாகனங்களின் விலை ரூ.25,000 வரை உயரும்
அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.28.39 லட்சம் கோடியாக அதிகரிப்பு
வங்கிகளை இணைப்பதால் சிறப்பாக செயல்பட முடியும்: பரோடா வங்கி பொது மேலாளர்