வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

எல்&டி நிறுவனத்துக்கு விமான நிலைய கட்டுமான ஒப்பந்தம்

DIN | Published: 19th February 2019 12:51 AM

முக்கிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை லார்சன் அண்டு டியூப்ரோ (எல்& டி) நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், பொருள்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கான ஒப்பந்தத்தை எல் அண்டு டி கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது. அந்த விமான நிலையத்தின் கட்டுமானம், புதிய பயணிகள் முனையம், பழைய முனையத்தைப் புதுப்பித்தல், விமானங்களுக்கான புதிய ஓடுபாதை, பழைய ஓடுபாதையைப் புதுப்பித்தல், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்களுக்கான வழித்தடம், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், வடிகால் அமைப்பு உள்ளிட்ட பணிகளை நிறுவனம் மேற்கொள்ள உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், விமான நிலையத்தின் விவரம் குறித்தோ அல்லது ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்தோ அந்நிறுவனம் தகவல் எதுவும் அளிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.7,000 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

More from the section

வசந்த் அண்ட் கோ-வில் ஏசி திருவிழா
வீட்டுமனை, மருத்துவம், ஏ.சி.- பிரிட்ஜ் அனைத்தும் ஒரே இடத்தில்! கிராண்ட் எக்ஸ்போ சென்னையில் இன்று தொடக்கம்
ரெப்கோ வங்கியின் வர்த்தகம் ரூ.15,000 கோடியைத் தாண்டி சாதனை
கேடிஎம்-இல் 48 சதவீத பங்கு மூலதனம்: பஜாஜ் ஆட்டோவுடன் பைரர் இண்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை
அசோக் லேலண்ட் அலுவலகத்துக்கு பசுமை விருது