24 மார்ச் 2019

கோதுமை உற்பத்தி சாதனை அளவை எட்டும்

DIN | Published: 22nd February 2019 12:53 AM


இந்தியாவின் கோதுமை உற்பத்தி 2018-19 பயிர் பருவத்தில் முன்னெப்போதும் காணப்படாத வகையில் 10 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய வேளாண் ஆணையர் எஸ்.கே.மல்ஹோத்ரா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
நடப்பு பருவத்தில் குளிர்காலம் நீடித்திருப்பதன் காரணமாக ரபி பருவத்தில் கோதுமை  உற்பத்தி சாதனை அளவை எட்டும். அதேபோன்று, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும்.
பருப்பு வகைகளின் உற்பத்தி 2.5 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
அதேசமயம், கடந்தாண்டில் 2.9 கோடி டன்னாக மட்டுமே காணப்பட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்) 3.2-3.3 கோடி டன்னாக அதிகரிக்கும்.
கோதுமை உற்பத்திக்கு இந்த கால  நிலை மிகச்சிறந்ததாக உள்ளது. சமீப கால மழைப்பொழிவு மற்றும் நீடித்து காணப்படும் குளிர்காலம் ஆகியவை கோதுமை விளைச்சலுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.
எனவே, நடப்பு 2018-19 நிதியாண்டில் கோதுமை உற்பத்தி சாதனை அளவாக  10 கோடி டன்னைத் தாண்டும். முந்தைய ஆண்டில் இதன் உற்பத்தி 9.97 கோடி டன்னாக இருந்தது.
பருப்புகள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு கண்டு விட்டது. இதையடுத்து, மத்திய அரசு தற்போது எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரித்து அவற்றின் இறக்குமதியை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றார் அவர்.
 

More from the section

தங்கம் பவுனுக்கு ரூ.168 உயர்வு
எஸ்ஆர்எஸ் பைனான்ஸ்  ரூ.13 கோடி கடன் மோசடி: ரிசர்வ் வங்கியிடம் கர்நாடக வங்கி அறிக்கை தாக்கல்
வாகனங்களின் விலை ரூ.25,000 வரை உயரும்
அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.28.39 லட்சம் கோடியாக அதிகரிப்பு
வங்கிகளை இணைப்பதால் சிறப்பாக செயல்பட முடியும்: பரோடா வங்கி பொது மேலாளர்