புதன்கிழமை 20 மார்ச் 2019

நவீன 5ஜி ரக ஸ்மார்ட்போன்: சாம்சங் முதன் முதலில் அறிமுகம்

DIN | Published: 22nd February 2019 12:52 AM


தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் மடக்கும் வகையிலான நவீன 5ஜி ரக ஸ்மார்ட்போனை சந்தையில் முதன் முதலில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் டி.ஜே. கோஹ் கூறியதாவது: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடக்கும் 5ஜி வகை ஸ்மார்ட்போன் முதன்முதலாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மடங்கிய நிலையில் 4.6 அங்குல திரையைக் கொண்டுள்ள இவ்வகை ஸ்மார்ட்போனை திறக்கும்போது 7.3 அங்குல டேப்லட்டாக மாறும். இது ஒரு புத்தகத்தை திறந்தால் எவ்வளவு அகலம் இருக்குமோ அதுபோன்று இருக்கும்.
கேலக்ஸி ஃபோல்டு ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை 1,980 டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.40 லட்சம் ரூபாய்.
இவ்வகை ஸ்மார்ட்போனை பயன்படுத்தி யூ டியூப் பார்த்தல்,  நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், இணையதள தேடல் என அனைத்துவிதமான செயல்களையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய தலைமுறைக்கான இன்றைய தொழில்நுட்பத்தில் எல்லைகளை கடந்து சாம்சங் இதனை அறிமுகம் செய்துள்ளது என்றார் அவர். இதைத் தவிர, 5ஜி தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையிலான கேலக்ஸி எஸ் 10 மாடலையும் மேம்படுத்தவுள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது. இருப்பினும், அதன் விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்து சாம்சங் எதையும் அறிவிக்கவில்லை.
 

More from the section

ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் இயக்கம் மேலும் குறையும்: டிஜிசிஏ
காளையின் ஆதிக்கத்தில் பங்கு வர்த்தகம்: சென்செக்ஸ் 268 புள்ளிகள் அதிகரிப்பு
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி சுஸுகியின் ஈக்கோ அறிமுகம்
2-வது இடைக்கால ஈவுத்தொகை: ஐஓசி அறிவிப்பு
பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்